முக்கிய துறைகள் பட்டியலை அரசு விரைவில் வெளியிடும் : நிர்மலா சீதாராமன்

முன்னதாக, தற்சார்பு இந்தியா Aatmanirbhar Bharat என்ற அடிப்படையில் வெளியிட்ட அறிவிப்புகளில் நேரடி பண பலன்கள், சலுகை திட்டங்கள் மட்டுமின்றி கொள்கை முடிவுகளும் வெளியிடப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2020, 08:22 PM IST
  • பொதுத்துறை நிறுவனங்களை முக்கிய துறைகள் மற்றும் முக்கிய துறை சாராதவை என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் என அரசு கூறியது.
  • முக்கியத்துறைகளில் பட்டியலிடப்பட்டவை தவிர பிற நிறுவனங்களை படிப்படியாக தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டது.
  • அனைத்து துறைகளிலும் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என்றாலும், சில குறிப்பிட்ட துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
முக்கிய துறைகள் பட்டியலை அரசு விரைவில் வெளியிடும் : நிர்மலா சீதாராமன் title=

கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க ₹21 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்ட விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் வெளியிட்டார். தற்சார்பு இந்தியா Aatmanirbhar Bharat என்ற அடிப்படையில் வெளியிட்ட இந்த அறிவிப்புகளில் நேரடி பண பலன்கள், சலுகை திட்டங்கள் மட்டுமின்றி கொள்கை முடிவுகளும் வெளியிடப்பட்டன.

அதில் ஒன்றாக, பொதுத்துறை நிறுவனங்களை முக்கிய துறைகள் மற்றும் முக்கிய துறை சாராதவை என இரண்டு பகுதிகளாக வெளியிடுவது எனவும்,முக்கிய துறைகள் என பட்டியலிடப்பட்ட பொதுத்துறைகளில் அதிகபட்சமாக 4 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

முக்கியத்துறைகளில் பட்டியலிடப்பட்டவை தவிர பிற நிறுவனங்களை படிப்படியாக தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில், காப்பீடு நிறுவனங்கள், நிலக்கரி, ரயில்வே, நிலக்கரி உள்ளிட்ட துறைகள் முக்கிய துறைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ALSO READ | ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி  ₹87,422 கோடி வசூல் : நிதியமைச்சகம் தகவல்

பொதுத்துறை நிறுவனங்களில் எந்தெந்த துறைகள் அல்லது நிறுவனங்கள் முக்கிய துறைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொதுத்துறை நிறுவனங்களில் முக்கிய துறைகள் எவை என வரையறை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
 முக்கிய துறைகள் என பட்டியலிடப்பட்டதில் அதிகபட்சமாக 4 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். 

இவ்வாறு எண்ணிக்கையை குறைப்பதற்காக ஒரே துறையில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படலாம்.
 மேற்கண்ட கொள்கை முடிவின்படி, முக்கிய துறைகள் எவை எவை என்ற பட்டியல் வெளியிடப்படும். தற்சார்பு இந்தியா அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கையை மத்திய அரசு வெளியிட உள்ளது. 

ALSO READ அரசின் கனவுத் திட்டத்தில் இணைய வரிசை கட்டும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!!

அனைத்து துறைகளிலும் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும் இருப்பினும், சில குறிப்பிட்ட துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என்றார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. 

ALSO READ | விற்பனை  சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்  

இதில் வட்டி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக முடிவு எடுக்கும் என்றார்.

நாட்டின் பொருளாதார நிலை பற்றி குறிப்பிட்ட அவர், பொருளாதார இடர்பாட்டில் இருந்து கண்டிப்பாக மீண்டுவர முடியும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், எவ்வளவு காலஅளவில் இதில் இருந்து மீள முடியும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது என்றார்.

Trending News