Paytm Wallet தொடர்பாக மாற்றப்பட்டுள்ள முக்கிய விதியின் விபரம் உள்ளே..!!!

Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 12:12 PM IST
  • Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இப்போது வரை கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet க்கு பணத்தை போடுவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
  • ஆனால் இப்போது நிறுவனம் விதிகளை மாற்றிவிட்டது.
Paytm Wallet தொடர்பாக மாற்றப்பட்டுள்ள முக்கிய விதியின் விபரம் உள்ளே..!!! title=

Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Paytm Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் இன்னும் கொஞ்சம் பணம் செலுத்த தயாராக இருங்கள்.

மளிகைக் கடைகளிலிருந்து பொருட்களை வாங்க, காய்கறி வாங்க, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள், புத்தகம் வாங்குதல், எரிவாயு சிலிண்டர்கள்,மொபைல் ரீசார்ஜ்  செய்தல், மற்றும் டி.டி.எச் அல்லது ஆன்லைன் ஆர்டர்கள் என சகலவிதமான சிறிய மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைக்கு பலர் Paytm Wallet ஐப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் Paytm ஐப் பயன்படுத்துவதற்கு இன்று (அக்டோபர் 15) முதல் நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டும்.

Paytm இல் கிரெடிட் கார்டில் பணத்தைச் சேர்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet -ல் பணத்தை போட அக்டோபர் 15 முதல் 2% கட்டணம் வசூலிக்கப்படும்

இப்போது வரை கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet க்கு பணத்தை போடுவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் இப்போது நிறுவனம் விதிகளை மாற்றிவிட்டது.

Paytmbank.com இல் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, அக்டோபர் 15, 2010 முதல், ஒரு நபர் கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet க்கு பணத்தை போடுவதற்கு  2 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 2 சதவீத கட்டணத்தில் ஜிஎஸ்டியும் அடங்கும். உதாரணமாக, நீங்கள் கிரெடிட் கார்டுடன் ஒரு பேடிஎம் வாலெட்டில் நீங்கள் 100 ரூபாய் சேர்த்தால், உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து 102 ரூபாய் செலுத்த வேண்டும். முன்னதாக இந்த விதி அக்டோபர் 9 முதல் செயல்படுத்தப்பட இருந்தது.

மேலும் படிக்க | நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடக் கூடாது..!!!

இருப்பினும், இந்நிறுவனம் தற்போது கிரெடிட் கார்டில் இருந்து Paytm இல் பணம் போடுவதற்கு 1 சதவீத கேஷ்பேக் அளிக்கிறது.

எனினும், வேறு எந்த தளத்திலும் Paytm Wallet க்கு மாற்றும்போது கூட கட்டணம் ஏதும் இருக்காது. நீங்கள் டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் Paytm வாலெட்டில் பணத்தை சேர்த்தாலும் கட்டணம் ஏதும் இருக்காது.

1 ஜனவரி 2020 அன்று, நிறுவனம் விதிகளையும் மாற்றியது. முன்னதாக, விதிகள் 1 ஜனவரி 2020 அன்று மாற்றப்பட்டன. இப்போது வரை, ஒரு பயனர் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரை கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை சேர்தால், அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், ரூ .10,000 க்கு மேல் பணம் சேர்ப்பதற்கு அவர் 2 சதவீத கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அக்டோபர் 15 முதல், கிரெடிட் கார்டிலிருந்து,  Paytm பவாலெட்டில் சேர்க்கும் எந்த அளவிலான தொகைக்கும், நீங்கள் 2 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியாவில் ரெப்ரெஜிரண்ட் ஏசி இறக்குமதிக்கு தடை, சீனா மீதான மற்றொரு Financial Strike.... !!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News