NPS திட்டம்: மனைவி பெயரில் கணக்கு திறந்தால் மாதம் ரூ.45,000 வரை பெறலாம்!

புதிய பென்ஷன் (என்பிஎஸ்) திட்டத்தில் மனைவியின் பெயரில் வெறும் ரூ.1,000 டெபாசிட் செய்து கூட கணக்கை  திறந்து கொள்ளமுடியும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 16, 2022, 06:22 AM IST
  • நிரந்தரமான ஒரு வருமானம் கிடைக்க சரியான முதலீடு என்பிஎஸ் திட்டம்.
  • உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
  • 60 வயதை எட்டியதும் மொத்த தொகை கிடைக்கும்.
NPS திட்டம்: மனைவி பெயரில் கணக்கு திறந்தால் மாதம் ரூ.45,000 வரை பெறலாம்! title=

ஒரு கணவன் அவருக்கு பிறகு அவரது மனைவி பணத்தேவைக்காக பிறரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்தாலோ அல்லது தனது மனைவிக்கு நிரந்தரமான ஒரு வருமானம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என நினைத்தாலோ அதற்கான சரியான முதலீட்டு திட்டம்  புதிய பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) திட்டம்.  இந்த என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் மனைவி பெயரில் கணக்கைத் தொடங்க வேண்டும், 60 வயதை எட்டியதும் அவருக்கு மொத்த தொகை கிடைக்கும்.  மொத்த தொகை கிடைப்பது மட்டுமின்றி அவர்களும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாகவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.  

இந்த புதிய பென்ஷன் சிஸ்டம் கணக்கில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.  இதில் நீங்கள் உங்கள் மனைவியின் பெயரில் வெறும் ரூ.1,000 டெபாசிட் செய்து கூட கணக்கை  திறந்து கொள்ளமுடியும்.  இந்த என்பிஎஸ் கணக்கின் அந்நபருக்கு 60 வயது ஆனதும் முதிர்ச்சி அடைந்துவிடும், இதனை நீங்கள் நீட்டிக்க விரும்பினால் புதிய விதிகளின் அடிப்படியில் உங்களால் மனைவியின் 65 வயது வரை கணக்கின் காலத்தை நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

உதாரணமாக உங்கள் மனைவிக்கு 30 வயதாக இருந்தால், அவருடைய என்பிஎஸ் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்யும்பொழுது, ஆண்டுதோறும் முதலீட்டில் 10 சதவீதம் வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் ரூ.1,11,98,471 கோடி இருக்கும்.  இதில் அவர்களுக்கு சுமார் ரூ. 44,79,388 கூடுதலாக கிடைக்கும்.  இது தவிர அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.45,000 வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  என்பிஎஸ் என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த புதிய பென்சன் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தின் வருமானத்திற்கு எவ்வித உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விவசாயிகளே! ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இதை அப்டேட் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News