ஓய்வூதியதாரர்களே உஷார்!! நவம்பர் 30-க்குள் இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

Pensioners Life Certificate: மத்திய அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ ஏதேனும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2024, 09:39 PM IST
  • ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
  • வாழ்க்கை சான்றிதழ் என்றால் என்ன?
  • இதற்கான விதி என்ன?
ஓய்வூதியதாரர்களே உஷார்!! நவம்பர் 30-க்குள் இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

Pensioners Life Certificate: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். மத்திய அரசிடமிருந்தோ அல்லது மாநில அரசிடமிருந்தோ ஏதேனும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால், உங்கள் ஓய்வூதியம் அடுத்த மாதத்திலிருந்து நிறுத்தப்படலாம். 

Add Zee News as a Preferred Source

வாழ்க்கைச் சான்றிதழ்

ஆகையால், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்து விடுவது நல்லது. அப்படி ஒரு சிலரால் இந்த காலக்கெடுவிற்கு வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை என்றால், அதை சமர்ப்பித்த பிறகு, நிலுவைத் தொகையுடன் சேர்த்து முழு ஓய்வூதியத் தொகையும் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pensioners: ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்

- ஓய்வூதியம் பெறுவோர் அரசு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
- வாழ்க்கைச் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சமர்ப்பிக்கலாம். 
- ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமான் போர்ட்டல் (Jeevan Pramaan Portal) மூலமாகவும், முக அங்கீகாரம் மூலமாகவும், போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாகவும், நியமிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்து மூலமாகவும், டோர் ஸ்டெப் வங்கி மூலமாகவும் இதை சமர்ப்பிக்கலாம்.

Life Certificate: இதற்கான விதி என்ன?

- வாழ்க்கை சான்றிதழுக்கான விதியின் கீழ், 60 முதல் 80 வயது வரை உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்க்கை சான்றிதழை (ஜீவன் பிரமான் பத்ரா) அதாவது லைஃப் சர்ட்ஃபிகேட்டை நவம்பர் 1 முதல் நவம்பர் 30 -க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
- 80 வயதான சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்கள் இந்த சான்றிதழை அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 -க்குள் சமர்ப்பிக்கலாம்.
- விதியின் கீழ், வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். 
- இந்த தேதிக்குள் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

Jeevan Pramaan Patra: வாழ்க்கை சான்றிதழ் என்றால் என்ன

ஜீவன் பிரமான் பத்ரா என்பது ஓய்வூதியதாரர்களுக்கான பயோமெட்ரிக் இயக்கப்பட்ட டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழாகும். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை இது காட்டுகிறது. இந்த சான்றிதழின் மூலம், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி தொடர்கிறது. முதியோர்கள் வங்கிக்கோ, ஓய்வூதியத் துறைக்கோ அவ்வப்போது செல்வது சிரமமாக இருப்பதால், ஆயுள் சான்றிதழ் வழங்கும் வசதியை அரசு தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

மொபைலைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே வாழ்க்கை சான்றிதழை சமர்பிப்பது எப்படி?

- ஓய்வூதியர் நலத்துறை (DoPPW) முக அங்கீகாரம் மூலம் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை வழங்குகிறது.

- இதற்கு முதலில், ஓய்வூதியம் பெறுவோர் 5MP அல்லது அதற்கு மேற்பட்ட கேமரா கொண்ட தங்கள் ஸ்மார்ட்போனில் ‘AadhaarFaceRD’ ‘Jeevan Praman Face App’ ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

- செயல்முறையை தொடங்கும் முன் உங்களின் ஆதார் எண்ணை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். 

- ஆபரேட்டர் அதெண்டிகேஷனுக்கு சென்று உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யவும். 

- அதன் பின்னர் தேவையான தகவல்கள் அனைத்தையும் நிரப்பவும். 

- மொபைலின் முன்பக்கக் கேமராவில் உங்களைப் புகைப்படம் எடுத்து அதை சமர்ப்பிக்கவும்.

- உங்கள் தொலைபேசியில் SMS மூலம் ஜீவன் பிரமான் பத்ராவைப் பதிவிறக்குவதற்கான இணைப்பைப் பெறுவீர்கள்.

- அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்களுடன் வைத்திருக்கலாம்.

இந்த முறைகள் மூலவும் வாழ்க்கைச் சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்

வங்கி/அஞ்சல் அலுவலகம்: வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

உமங் செயலி: உமங் செயலியின் உதவியுடன் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

முக அங்கீகாரம்: முகம் அடையாளம் காணும் அமைப்பு மூலம் ஆயுள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்கலாம்.

ஜீவன் பிரமாண் போர்ட்டல்: ஆன்லைன் போர்ட்டலின் மூலம் டிஜிட்டல் வடிவத்தில் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

டோர் ஸ்டெப் பேங்கிங்: இந்த சேவையானது வங்கியின் டோர் ஸ்டெப் பேங்கிங் வசதி மூலம் வீட்டிலேயே வழங்கப்படும்.

ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்: ஆதார் அட்டையின் உதவியுடன் டிஜிட்டல் வடிவில் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

தபால்காரர் சேவை: ஆயுள் சான்றிதழை தபால்காரரின் உதவியுடன் எளிதாக சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் அசத்தல் திட்டம்! இந்த முதலீட்டில் ரூ.4.5 லட்சம் வரை வட்டி கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News