General Provident Fund for Central Government Pensioners: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? மத்திய பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய அறிவுறுத்தல்களை வழங்கிய DoPPW
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் பெறுவதிலும், அவர்களுக்கான சலுகைகளை பெருவதிலும் சுமூகமான அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன்ன. அக்டோபர் 25, 2024 அன்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) புதிய அறிவுறுத்தல்களின் தொகுப்பை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்களில், GPF கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுவது குறித்த பிரச்சனைகள் பற்றியும், அத்தகைய தாமதங்களுக்கான வட்டித் தகுதி பற்றிய பொதுவான கவலைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள், ஓய்வூதியப் பட்டியலைத் தயாரிப்பதில் இருந்து ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) வழங்குவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உடனடி நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (GPF) இறுதித் தொகை தாமதமாக செலுத்தப்பட்டால், அதற்கு வட்டி வழங்கப்படும் என்றும் வழிமுறைகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் ஏற்படும் தாமதங்களின் தாக்கம் ஆகியவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஜிபிஎஃப் கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்பட்டால், அதற்கு வட்டி பொருந்துமா என்பது குறித்து சமீபத்தில் பலருக்கு பல கேள்விகள் இருந்ததால், அதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சமீபத்தில், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு தாமதமாக வழங்கப்படும் ஜிபிஎஃப் தொகைக்கான வட்டி குறித்து சில சந்தேக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனால், ஓய்வு பெற்ற பிறகு GPFக்கு வட்டி செலுத்தப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது." என்று குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் அசத்தல் திட்டம்! இந்த முதலீட்டில் ரூ.4.5 லட்சம் வரை வட்டி கிடைக்கும்!
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஜிபிஎஃப் வழங்கல் குறித்த மத்திய அரசின் புதுப்பித்தலில் உள்ள சில முக்கிய குறிப்புகள்:
- சரியான நேரத்தில் பணம் செலுத்துதல் (Timely Payment Requirement): பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவை) விதிகள், 1960 இன் விதி 34 இன் படி, ஒரு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் ஜிபிஎஃப் தொகை (GPF Amount) உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வது கணக்கு அதிகாரியின் கடமையாகும்.
- கட்டுப்பாடற்ற வழங்கல் (Unrestricted Disbursement): ஜிபிஎஃப் இருப்பு (GPF Balance) ஓய்வு பெற்ற பணியாளருக்கு மட்டுமே சொந்தமானது. ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தால், அதன் காரணமாக ஜிபிஎஃப் வழங்கலை தாமதப்படுத்த முடியாது.
- தாமதமான வழங்கலுக்கு வட்டி (Interest on Delayed Payments): விதி 11(4) -இன் படி, ஓய்வு பெற்றவுடன் GPF இருப்புத் தொகை செலுத்தப்படாவிட்டால், ஓய்வூதியத் தேதிக்கு அப்பாற்பட்ட காலத்திற்கு வட்டி வழங்க வேண்டும்.
- வட்டி ஒப்புதல் செயல்முறை (Interest Approval Process): பணியாளர் ஓய்வுக்கு பிறகு ஜிபிஎஃப் தொகையை அளிக்க ஆறு மாதங்கள் வரை ஏற்படும் தாமதத்திற்கு அளிக்கபப்டும் வட்டிக்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் (PAO) ஒப்புதல் அளிக்கலாம். ஆறு மாதங்களுக்கும் மேலான தாமதங்களுக்கு, கணக்கு அலுவலகத் தலைவரின் ஒப்புதல் தேவை. அதே சமயம் ஒரு வருடத்திற்கு மேலான தாமதங்களுக்கு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அல்லது நிதி ஆலோசகரின் அங்கீகாரம் தேவை.
- பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் (Ensuring Accountability): தாமதங்களைத் தடுக்கவும், வட்டிச் செலவைக் குறைக்கவும், சரியான நேரத்தில் ஜிபிஎஃப் தொகை பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்யவும், GPF கட்டணச் செயல்முறை முழுவதற்கும் செயலாளர் தெளிவான பொறுப்புகளை வழங்குவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ