மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உடனடியாக படிக்கவும். ஏனெனில் ரேஷன் தொடர்பாக மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதன்படி கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.100க்கு நான்கு பொருட்களின் ரேஷன் கிட் (ஆனந்த்சா ஷிதா) வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரேஷன் கிட்டில் ஒரு கிலோ ரவை, கடலை பருப்பு, சர்க்கரை மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை கிடைக்கும்.
இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் கௌரி கணபதி பண்டிகையை முன்னிட்டு அதவாது செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அரசு ரேஷன் கடைகளில் ரூ.100க்கு ரேஷன் கிட் பெற்றுக்கொள்ளலாம். மறுபுறம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் ரூ.100க்கு ரேஷன் கிட்கள் வழங்கப்படும். அதாவது, கௌரி கணபதி மற்றும் தீபாவளி ஆகிய இரு பண்டிகைகளிலும் ரேஷன் கார்டுதாரர்கள் ரூ.100-100க்கு ரேஷன் கிட் பெற முடியும். அந்த்யோதயா அன்ன யோஜனா மற்றும் மாநிலத்தில் உள்ள முன்னுரிமை குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.100க்கு ஒரு கிலோ ரவை, கடலை பருப்பு, சர்க்கரை மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும். அவுரங்காபாத் மற்றும் அமராவதி கோட்டங்களின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் நாக்பூர் கோட்டத்தின் வார்தா மாவட்டம் உட்பட, மொத்தம் 14 வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள விவசாயிகள் (ஏபிஎல்) மற்றும் கேசரி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் ரேஷன் கிட் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
அரசின் கஜானாவுக்கு ரூ.827 கோடி சுமை ஏற்படும்.
மாநிலத்தில் மொத்தம் 1 கோடியே 65 லட்சத்து 60 ஆயிரத்து 256 ரேஷன் கார்டுதாரர்கள் ரூ.100க்கு ரேஷன் கிட் மூலம் பயன்பெறலாம். மொத்த விற்பனை சந்தையில் இருந்து ரேஷன் கிட்களை கொள்முதல் செய்து விநியோகம் செய்ய ரூ.826 கோடியே 35 லட்சம் செலவு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரேஷன் கிட் ஒன்றுக்கு ரூ.239 என்ற விலையில் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு பெறுவதற்கான தகுதி
* 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு குடிமகனும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
* ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தேவையான ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.
* உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருக்க வேண்டும்.
ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082
மேலும் படிக்க | Indian Railways: உங்களுக்கு தெரியுமா... ரயில் ஓட எத்தனை இன்ஜின் ஆயில் தேவை...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ