உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி?

https://tafcop.dgtelecom.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு செல்வதன் மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்ணை நீக்கமுடியும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 08:38 AM IST
  • ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
  • முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம்களை நீக்கி கொள்ளலாம்.
உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி? title=

இந்திய குடிமகன்களாகிய அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது, நமது முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் மாறியுள்ளது.  கல்வி சம்மந்தமான வேலைகள் தொடங்கி,பணிபுரியும் இடங்கள், அரசின் சலுகைகளை பெறவும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது.  இந்த அடையாள அட்டையில் நமது கைரேகை, கருவிழி, முழுமையான விவரங்கள் என தனிநபரின் அனைத்து ரகசியங்களும் அடங்கி இருக்கிறது.  முன்னர் எப்படி ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் முக்கியமான ஆவணமாக செயல்பட்டு வந்ததோ அதைவிட பன்மடங்கு முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை மாறிவிட்டது.  இப்போது அரசு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும், வங்கி கணக்குடன் இணைக்கவும், பான் கார்டுடன் இணைக்கவும் என பல முக்கியமான ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பதை அவசியமாக்கிவிட்டது.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

அதுமட்டுமல்லாது ஆதார் என்னுடன் மொபைல் எண்ணை இணைக்கும் செயல்முறையும் அவசியமாகிவிட்டது, கிட்டத்தட்ட இந்த செயல்முறை அனைத்து அட்டைதாரர்களும் செய்து முடித்துவிட்டனர்.  ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கும்போது சிலர் வேறு மொபைல் எண்ணை பயன்படுத்தியிருக்கலாம், ஆதார் அட்டை கிடைத்த பிறகு ஏதேனும் சில காரணங்களால் மொபைல் எண்ணை மாற்றியிருக்கலாம், அப்படிப்பட்டவர்கள் அவர்களது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.  பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணுடன் மட்டும் தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், ஒரு ஆதார் அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்களை இணைக்கலாம் என்று கூறப்படுகிறது.  இப்போது நீங்கள் ஏராளமான ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் சில மொபைல் எண்கள் பயன்பாட்டில் இல்லையென்றால் அதனை நீக்கிவிடலாம்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டிலில்லாத மொபைல் எண்ணை நீக்க விரும்புபவர்கள், முதலில் https://tafcop.dgtelecom.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.  இந்த பக்கத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களது மொபைல் எண்ணை பதிவிட வேண்டும், மொபைல் எண்ணை உள்ளிடதும் அந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.  அதன்பிறகு அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டு பார்க்க இதுவரை ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைத்திருந்த மொபைல் எண்களின் மொத்த பட்டியலும் கட்டப்படும்.  அதில் எந்த எண் பயன்பாட்டில் இல்லையோ அந்த எண்ணை நீங்கள் நீக்கி கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News