புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வைப்புச் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 0.30% (30 பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. 10 கோடி மற்றும் அதற்கு மேல்10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 2.70% என்ற அளவிலேயே இருக்கும். திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 15 முதல் பொருந்தும். எஸ்பிஐ ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை எஸ்பிஐ 20பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வீதங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
2 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை எஸ்பிஐ 20பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி வீதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல, தற்போது 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கானவட்டி விகிதங்கள் 3% என்றும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.5% என்ற அளவிலும் தற்போது வங்கி உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு Bill-ஐ Google Pay மூலம் செலுத்தலாம்; ஈஸியான வழிமுறை
மேலும், 46 முதல் 179 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய நீண்டகால வைப்புத்தொகை இப்போது பொது மக்களுக்கு 4 % மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு 4.50 % வட்டியும் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான கால முதிர்வு உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.60% லிருந்து 5.80% ஆகவும், மூத்த குடிமக்களுக்கு 6.10% லிருந்து 6.30% ஆகவும் அதிகரித்துள்ளது.
ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்வு கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொது மக்களுக்கு 5.65 சதவீதத்தில் இருந்து 5.85 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 6.45 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ