SBI வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான good news

SBI, தனது இந்த புதிய வசதியில் கார்ட் தேவைப்படாது என்றும் OTP தேவைப்படாது என்றும் இது குறைந்தபட்ச தொடர்பு கொண்டது என்றும் கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 09:48 AM IST
  • SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • SBI-யின் QR அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி அறிமுகம்.
  • இதற்கு OTP தேவை இல்லை என்று வங்கி தெரிவித்துள்ளது.
SBI வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான good news title=

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான புதுப்பிப்பு! SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ATM-மிலிருந்து பணம் எடுக்க ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI தனது ATM-களில் QR அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. SBI, தனது இந்த புதிய வசதியில் கார்ட் தேவைப்படாது என்றும் OTP தேவைப்படாது என்றும் இது குறைந்தபட்ச தொடர்பு கொண்டது என்றும் கூறியுள்ளது.

SBI QR அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதிக்கான செயல்முறை இதோ: -

Step 1 - SBI ஏடிஎம்மில் QR குறியீடு பொத்தானை அழுத்தவும்

Step 2 – YonoLite செயலியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

Step 3 – இதன் பிறகு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

முன்னதாக ஜனவரி 14 ஆம் தேதி, SBI தனது 10 பில்லியன் டாலர் உலகளாவிய மத்திய கால டர்ம் திட்டத்தின் கீழ் 600 மில்லியன் டாலர் வெளிநாட்டு நாணய பத்திரங்களை பட்டியலிட்டது. India INX-ன் உலகளாவிய பத்திர சந்தை (GSM) GIFT IFSCs உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான முதன்மை சந்தை தளமாகும்.

ALSO READ: Budget 2021: Budget Mobile App மூலம் நிர்மலா சீதாராமன் வழங்கும் பட்ஜெட்டை நேரலையில் காணலாம்

இந்த பத்திரங்கள் SBI-யின் லண்டன் கிளை மூலம் வழங்கப்பட்டன. மேலும் அவை ஆண்டுக்கு 1.80 என்ற மிகக் குறைந்த கூப்பன் விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறைந்த கூப்பன் நாட்டின் மிகப்பெரிய வங்கியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நாணய பத்திர வெளியீடுகளின் வலுவான செயல்முறைக்கு வழிவகுக்கிறது.

இந்த பட்டியலுடன் குளோபல் செக்யூரிட்டீஸ் சந்தை தளத்தில் மொத்தம் 2.6 பில்லியன் டாலர் பட்டியலிடப்பட்ட India INX-ல் தங்கள் வெளிநாட்டு நாணயப் பத்திரங்களை பட்டியலிட்டுள்ள மிகப் பெரிய பத்திரங்களை வழங்குபவர்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒன்றாகும்.

குளோபல் செக்யூரிட்டீஸ் சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து, இது GIFT IFSC இல் பத்திரங்களுக்கான (Bonds) முன்னணி பட்டியல் தளமாக உள்ளது. இந்தியாவின் குளோபல் செக்யூரிட்டீஸ் சந்தை தளம் INX மற்ற சர்வதேச இடங்களுடன் இணையாக நிதி திரட்டும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஜனவரி, 2018 இல் தொடங்கப்பட்டதிலிருந்து India INX இயங்குதளத்தில் நிறுவப்பட்ட எம்.டி.என் களின் மதிப்பு 48.5 பில்லியன் டாலராகும். மற்றும் பத்திரங்களின் பட்டியல் மொத்தம் 24.5 பில்லியன் டாலர் மதிப்புடையது.

ஜனவரி 12, 2021 அன்று, India INX டெரிவேடிவ்ஸ் விற்றுமுதல் 16.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இந்த எக்ஸ்சேஞ், உலகளாவிய வைப்புத்தொகை ரசீதுகள் மற்றும் REIT களின் பட்டியலைக் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் விரைவில் InvIT-கள் பட்டியலிடப்படவுள்ளன.

ALSO READ: Budget 2021: வரி விலக்கு முதல் கல்விக் கடன் வரை, இந்தியாவின் Top 10 எதிர்பார்ப்புகள்

Trending News