வீட்டிலேயே இருந்து ‘இந்த’ சுய தொழில்களை செய்யலாம்! அதிக வருமானம் தரும் ஐடியாக்கள்..

Small Start Up Ideas For Work From Home Employees: பலர், வீட்டிலேயே இருந்து சுய தாெழில் செய்யும் ஐடியாவில் இருப்பர். அப்படிப்பட்டவர்களுக்கான பதிவு, இது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2024, 09:02 PM IST
  • வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு அசத்தல் ஐடியா!
  • எளிதாக தொடங்கக்கூடிய சுய தொழில்கள்.
  • இதற்கு தேவைப்படும் முதலீடு எவ்வளவு?
வீட்டிலேயே இருந்து ‘இந்த’ சுய தொழில்களை செய்யலாம்! அதிக வருமானம் தரும் ஐடியாக்கள்.. title=

Small Business Ideas In Tamil: சமீப காலமாக சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. பலர், இதற்காக நன்கு ஆய்வு செய்த பின்னர் தாங்கள் பார்க்கும் அலுவலக வேலையை விட்டுவிட்டு, சுய தொழிலில் இறங்கி வருகின்றனர். அவர்களின் திட்டமிடலை பொறுத்து அவர்களின் முதலீடும் உள்ளது. 

சமீப காலமாக பல ஐடி நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. இதற்கு உலக பொருளாதாரமும் ஒரு பெரிய காரணமாக உள்ளது. பலர், சுய தொழிலில் இறங்கி ஒரு குட்டி நிறுவனத்திற்கு முதலாளியாகலாம் என யோசிப்பதும் இதனால்தான் எனக்கூறப்படுகிறது. அப்படி, வீட்டில் இருந்தே சிறிய தாெழில் மூலம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

ஆன்லைன் வகுப்பு:

வர்க்-ஃப்ரம்-ஹோம் கலாச்சாரம் கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பரவி விட்டது. இதனால் ஆரம்பத்தில் மக்கள் சிரமப்பட்டாலும் பின்னர் அதற்கே பழகிவிட்டு, இப்போது அலுவலகத்திற்கு அழைத்தாலும் செல்வதில்லை. இப்படி வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பவர்கள், தங்களின் அறிவை மேம்படுத்தவும், பிறரின் அறிவை மேம்படுத்தவும் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம், தங்களுக்கு தெரிந்த திறமைகளை, பாடங்களை பிறருக்கு சொல்லிகொடுத்தல் போதுமானது. இதற்காக பல அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் உங்களுக்கான ஆடியன்ஸை தேர்வு செய்து இந்த சிறு தொழிலை ஆரம்பிக்கலாம். தனியாக ஆரம்பிக்க எண்ணினால், சரியாக அதற்கான இணையதளத்தையும் தொடங்கலாம். இதற்கு, ரூ.25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை முதலீடு தேவைப்படலாம். 

ஆன்லைன் சந்தை:

அனைத்திற்கும் தற்போது ஆன்லைனில் வழி உண்டு. இதற்கு இ-காமர்ஸ் ஸ்டோர் என்று பெயர். இது, பொருட்களை விற்பனை செய்வதற்கு தகுந்த தளம் ஆகும். இதன் மூலம் நல்ல வருமானத்தையும் பார்க்கலாம். உங்களுக்கு எந்த மாதிரியான பொருட்களை விற்க வேண்டும் என்று முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை ஆடைகளாக இருக்கலாம், நகைகளாக இருக்கலாம், ஆர்கானிக் பொருட்களாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அதை அனைத்து தளங்களிலும் மார்கெட்டிங் செய்ய உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் முதலீடு ரூ.85 ஆயிரம் முதல்1 லட்சம் வரை இருக்கலாம். இந்த வணிகத்திற்கு ஜிஎஸ்டி பதிவு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படி.. தொடர்ந்து 8வது ஊதியக்கமிஷனா?

உணவு தயாரிப்பு/ டெலிவரி:

உணவு தொழிலுக்கு எந்த நாளும் சாவே கிடையாது என்று கூறுவர். இந்த தொழிலைத்தான் எந்த நாளில், எந்த நேரத்தில் ஆரம்பித்தாலும் லாபம் பார்க்க முடியும். இதை நன்றாக செய்ய உடலில் உறுதியும், கையில் முதலீடும் இருந்தால் போதுமானது. டீ கடை, ஸ்நாக்ஸ் கார்னர், சைவ உணவு, அசைவ உணவு, வெளிநாட்டு உணவு என எந்த வகையான உணவு தொழிலை ஆரம்பித்தாலும் அதை விரும்பு வாங்குவதற்கான வாடிக்கையாளர்கள் நம் ஊரில் உள்ளனர். எனவே, வீட்டில் இருந்து கேட்டரிங் ஆரம்பிப்பது, ஆபிஸ்களுக்கு உணவுகள் டெலிவரி செய்வது போன்ற தொழிலை ஆரம்பிக்கலாம், இதனால், வணிகர்கல் பெருக பெருக வருமானமும் பெருகும். 

ஆராய்ச்சி முக்கியம்!

எந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பும் அது குறித்த தகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு இறங்குவது பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படாமல் தடுப்பதற்கு நல்லதாகும். எனவே, கையில் இருக்கும் வேலையை விடுவதற்கு முன்பு இதில் இருக்கும் ஆபத்து காரணிகள், இதனால் ஏற்படும் விளைவுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 

மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News