தமிழ்நாடு சொத்துப் பதிவு: புதிய முத்திரை கட்டண விதிமுறைகள் டிசம்பர் 1 முதல் அமல்

Stamp Duty In Tamil Nadu: அடுக்குமாடி குடியிருப்பு சொத்து வாங்கும்போது, கட்டிடம், பிரிக்கப்படாத பாகம் சேர்த்து மொத்த மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்யும் புதிய நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடங்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2023, 05:15 PM IST
  • அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் தமிழ்நாடு மக்களுக்கு நல்ல செய்தி
  • சொத்துப் பதிவில் பதிவு கட்டணம், முத்திரைத் தீர்வை குறைகிறது
  • டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் கட்டண மாற்றங்கள்
தமிழ்நாடு சொத்துப் பதிவு: புதிய முத்திரை கட்டண விதிமுறைகள் டிசம்பர் 1 முதல் அமல் title=

சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் முதல் தேதியிலிருந்து அடுக்குமாடி குடியிருப்பு சொத்து விற்பனையில் பத்திரப்பதிவு கட்டணங்கள் மாற்றப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனைப் பத்திரங்களை பதிவு செய்வதற்கான புதிய முறையை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. சொத்து பதிவில், வீடு வாங்குபவர்கள் நிலம்/கட்டிடத்தின் கூட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்யலாம். இதற்கு முத்திரைக் கட்டணம் குறைக்கப்படுகிறது.

₹50 லட்சம் வரையிலான சொத்தின் கூட்டு மதிப்புக்கான முத்திரை வரி 7% லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ₹50 லட்சம் முதல் ₹3 கோடி வரை, முத்திரை வரி 7%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ₹3 கோடிக்கு, முத்திரை வரி 7% ஆக உள்ளது. தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அடிநிலம் பிரிக்கப்படாத பாகம் ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியை பொறுத்து கட்டுமான உடன்படிக்கை ஓர் ஆவணமாகவும் கிரயம் செய்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. குடியிருப்புகள் விற்பனையின்போது அடிநிலம், கட்டிடம் சார்ந்த பகுதிக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | அறிவிக்கப்படாத கட்டண வசூல்! வெட்ட வெளிச்சமான Google payஇன் தகிடுதத்தங்கள்

இந்த பரிவர்த்தனையில், விற்பனை ஆவணத்துக்கு 7 சதவீத முத்திரைத் தீர்வை, 2 சதவீத பதிவுக்கட்டணமும், கட்டுமான உடன்படிக்கைக்கு 1 சதவீத முத்திரைத் தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

ஆனால், தமிழ்நாட்டைத் தவிர, நாட்டின் பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில், கட்டிடம், அடிநிலம் சேர்த்த கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை ஆவணமாகவே பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த முறை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: அதிகரிக்கும் டிஏ, ஃபிட்மெண்ட் ஃபாக்டர்...உயரும் சம்பளம்

எனவே, இனிமேல் டிசம்பர் முதல் தேதியில் இருந்து ரூ.50 லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும், ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான குடியிருப்புக்கு முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் தமிழ்நாடு அரசு குறைக்கிறது.  

பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போலவே, கூட்டுமதிப்பில் முத்திரைத்தீர்வை சலுகையுடன் பதியும் புதிய நடைமுறை இன்னும் ஒருசில நாட்களில் அதாவது டிசம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாக பதியப்பட்டுள்ள குடியிருப்புகளை மறு விற்பனை செய்வதற்கு பத்திரப் பதிவுத்துறை அனுமதித்துள்ளது.

இந்த அனுமதியானது, டிசம்பர் முதல் தேதிக்கு பிறகு பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களை பொறுத்து விலக்கிக் கொள்ளப்படும் என்று, தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வருடங்களுக்கு பிறகு மாற்றப்பட்டன. ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் என சேவைகளுக்கான கட்டண வீதங்கள் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கடன் வாங்கணுமா... CIBIL ஸ்கோரை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News