இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமானதொரு அடையாள ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படிப்பட்ட ஆதார் அட்டையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டியது அவசியம். தற்போது புதிய ஆதார் அட்டையை எடுக்க அல்லது ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் தங்கள் தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்க மக்கள் செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட கட்டணங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யுஐடிஏஐ) ஒரு சுற்றறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையென்றால் அதனை நாம் மாற்றிக்கொள்ளலாம் அல்லது முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற ஏதேனும் ஒன்றை அப்டேட் செய்ய வேண்டுமென்றாலும் நீங்கள் செய்துகொள்ளலாம். இதுதவிர கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களையும் நீங்கள் அப்டேட் செய்துகொள்ளலாம். பொதுவாக குழந்தைகளுக்கு ஆதார் அட்டை புதிதாக எடுக்கிறீர்கள் என்றால் அவர்கள் 15 வயதை எட்டியதும் அவர்களுடைய கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் போன்ற பிற முக்கியமான தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் தகவலைப் அப்டேட் செய்யாதவர்கள், மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை, https://myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தங்கள் குடிமக்கள் தங்களது அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பித்து அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்ட பயனரின் விவரங்களில் மாற்றங்களைச் செய்ய, பயனர்களிடமிருந்து யுஐடிஏஐ வழக்கமாக ரூ.50 கட்டணமாக வசூலிக்கிறது. அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA), குறிப்பாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் யுஐடிஏஐ நிர்ணயம் செய்துள்ள இந்த கட்டணத்தை செலுத்தி அப்டேட் செய்துகொள்ள வேண்டும். இலவச யுஐடிஏஐ சேவையை MyAadhaar போர்ட்டலில் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் மையங்களில் ஆவணங்களைப் அப்டேட் ரூ.50 கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அப்டேட் செய்வதற்கான படிகள்:
1) யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2) அடுத்து 'எனது ஆதார்' என்கிற மெனுவுக்குச் செல்ல வேண்டும்.
3) 'உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4) 'மக்கள்தொகை தரவுகளை ஆன்லைனில் புதுப்பி' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5) 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
6) ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.
7) கேப்ட்சா சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
8) 'ஓடிபி அனுப்பு' என்பதை அழுத்த வேண்டும்.
9) 'புதுப்பிப்பு மக்கள்தொகை தரவு' என்கிற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
10) புதுப்பிக்க விவர விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
11) புதிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
12) ஆதார் ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அப்லோட் செய்ய வேண்டும்.
13) உள்ளிடப்பட்ட தகவல் அனைத்தும் சரியானதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
14) ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | Gold Loan: மிக மலிவான தங்க கடன் வழங்கும் வங்கிகள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ