புது டெல்லி: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் ஆபரேட்டர்களுடன் போட்டியிட புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், BSNL நிறுவனம் இப்போது 49 ரூபாய்க்கு புதிய சிறப்பு கட்டண வவுச்சரை (STV-49) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எஸ்.டி.வி சிறப்பு சலுகையை யை செப்டம்பர் 1 முதல் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் இந்த எஸ்.டி.வி யை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த புதிய கட்டண வவுச்சரில் என்ன சலுகை வழங்குகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.
இந்த பயனர்களுக்கான சிறந்த திட்டம்:
இத்தகைய திட்டத்தையும் வழங்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல்.(BSNL Prepaid Plan) குறுகிய நாள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தில் சிறந்த நன்மைகளை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் அதுவும் குறைந்த விலையில் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் பிஎஸ்என்எல் எண்ணை செயலில் வைத்திருக்க போதுமானது. திட்டத்தின் விலையும் அதிகமாக இல்லை, சில சமயங்களில் உங்களுக்கு கூடுதல் தரவு தேவைப்பட்டாலும் அல்லது அவசரகாலத்தில் கால் பண்ண வேண்டும் என்றாலும் இது பயனளிக்கும்.
ALSO READ |
VoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது?
BSNL-லின் தரவு வேகம் அதிகரிப்பு... எந்தெந்த பகுதியில் என தெரிந்து கொள்ளுங்கள்!!
100 ரூபாய்க்கு கீழ் 3GB தரவு திட்டம்:
பி.எஸ்.என்.எல் இதுபோன்ற பல திட்டங்களை 100 ரூபாய்க்கும் குறைவாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற இரண்டு திட்டங்கள் ரூ. 94 மற்றும் ரூ. 95 இல் வந்துள்ளன, இது ஜூலை மாதம் BSNL அறிமுகப்படுத்தியது. 90 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டங்களை ப்ரீபெய்ட் வவுச்சர்களின் உதவியுடன் நீட்டிக்கப்படலாம். இரண்டு திட்டங்களும் 3 ஜிபி தரவுடன் அழைப்பை மேற்கொள்ள 100 இலவச நிமிடங்களை வழங்குகிறது.