உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்: பயனர்களிடம் பணிந்த WhatsApp!

வாட்ஸ்அப் உங்கள் அழைப்புகளை கண்காணிக்காது, உங்கள் தொடர்புகளை ஃபேஸ்புக் உடன்  பகிர்ந்து கொள்ளாது என WhatsApp பயனர்களிடம் பணிந்துள்ளது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2021, 07:01 AM IST
உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்: பயனர்களிடம் பணிந்த WhatsApp!  title=

வாட்ஸ்அப் உங்கள் அழைப்புகளை கண்காணிக்காது, உங்கள் தொடர்புகளை ஃபேஸ்புக் உடன்  பகிர்ந்து கொள்ளாது என WhatsApp பயனர்களிடம் பணிந்துள்ளது..!

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை (Terms and Privacy Policy) மாற்றி அமைத்துள்ளது WhatsApp. பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். Facebook நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனது புதிய தனியுரிமைக் கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Whatsapp-ல் தனியுரிமைக் கொள்கை தொடர்பாக பெரும்பாலான மக்களிடையே பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்து மக்கள் காட்டிய கோவம் மட்டும் வெளியிடப்பட்ட விமர்சனங்களுக்குப் பிறகு, நிறுவனம் இப்போது தன் மௌனத்தை கலைத்துள்ளது. பயனர்களின் எந்த தகவலையும் நாங்கள் எடுத்து பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, பயனர்களின் தனிப்பட்ட செய்திகளிலிருந்து Whatsapp தகவல்களை எடுக்காது என்று Whatsapp தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பயனர்களின் தனிப்பட்ட அழைப்புகளின் தரவுகளும் எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. 

ALSO READ | WhatsApp-லிருந்து வெளியேற Uninstall செய்தால் போதாது.. இதையும் செய்யுங்கள்!!

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது., "Whatsapp அல்லது Facebook உங்கள் தனிப்பட்ட செய்திகளை அணுகவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது. Whatsapp உங்கள் அழைப்புகளை கண்காணிக்காது, உங்கள் தொடர்புகளை Facebook உடன்  பகிர்ந்து கொள்ளாது. உங்களால் பகிரப்பட்ட இருப்பிடம் மறைக்கப்பட்டிருக்கும், மேலும் குழு அரட்டைகளும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று Whatsapp தெரிவித்துள்ளது.

உங்கள் செய்திகளை நீங்கள் மறைந்து போகும்படி அமைக்கலாம் என்றும், உங்கள் தரவையும் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் Whatsapp சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் Whatsapp இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை சுயமாக அழிக்கிறது. பயனர்கள் தங்கள் தரவைப் பதிவிறக்குவதற்கான அம்சமும் Whatsapp-ல் உள்ளது.

ALSO READ | Whatsapp vs Signal: அதற்குள் முதலிடத்தை பிடித்துவிட்டதா Signal? Whatsapp-க்கு ஆப்பா?

அதன் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமையை பாதிக்காது என்றும் Whatsapp உறுதியளித்துள்ளது. Whatsapp கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் புதிய தனியுரிமைக் கொள்கை பயனர்கள் வணிகக் கணக்குகளுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதற்கானது என்றும், தனிப்பட்ட உரையாடல்கள் இதனால் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

Whatsapp பலமுறை தெளிவுபடுத்திய போதிலும் பயனர்களின் நம்பிக்கையை அது பெறவில்லை. ஏனெனில், Whatsapp பயனர்கள் அதிக பாதுகாப்புள்ள செயலிகளான Signal மற்றும் டெலிகிராம் போன்றவற்றிற்கு மாறி வருகிறார்கள். இரண்டு பயன்பாடுகளும் இந்தியாவிலும், மேலும் பல நாடுகளிலும் சிறந்த இலவச செயலிகளாக மாறியுள்ளன.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News