CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! எப்படி பார்ப்பது!!

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என CBSE நிர்வாகம் அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2018, 08:55 AM IST
CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! எப்படி பார்ப்பது!! title=

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என CBSE நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு Economics தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

cbse.nic.in cbseresults.nic.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் CBSE Class 12 Result 2018 கிளிக் செய்யவும்.
கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

Trending News