யூநீக் நிறுவனத்தின் 'ஃபெம்-மே பிரைட் ஆப் இந்தியா2022' நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான தினேஷ் ஆர்யா மற்றும் வாத்சலா ஆகியோருக்கு நிகில் சந்தன், சோனாலி ஜெயின், காஷிஷ் ஜெயின், சபரி நாயர் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர். மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஃபெம்-மே ஃபேஷன் ஷோவை கருண் ராமன் வடிவமைத்திருந்தார்.
இளம் தலைமுறையினரின் ஃபேஷன் மற்றும் திரைத்துறை கனவுகளை நனவாக்க மேடை அமைத்துத்தரும் ஃபெம்-மே, ஃபேஷன் நிகழ்ச்சியின் நடுவர்களாக விவேக் கருணாகரன், விஜய் கபூர், ரஞ்சித் கருணாகர், டாக்டர் நிஷா சீனிவாசன், ரஞ்சிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை தரமணி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூநீக் நிறுவன மேலாண் இயக்குநர் நிகில் சந்தன் சார்பில் வெற்றியாளர்களுக்கு மகுடம் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | Mr,Miss, Mrs. Tamilnadu: இம்முறை கோவையில் பிரம்மாண்டமாக நடக்கிறது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 10 ஆண்களும், 9 பெண்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். நிகழ்வில் பேசிய ஃபெம்-மே இயக்குனர் சோனாலி ஜெயின்,"ஒவ்வொரு பிராண்டையும் பிரபலப்படுத்த மாடல் தேவைப்படுகிறது. மாடல்கள் தங்களின் வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இவர்களுக்கு இடையே 'ஃபெம்-மே' இணைப்பு பாலத்தை உருவாக்குகிறது. மேலும், 'ஃபெம்-மே'வின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் காரணமின்றி நடத்தப்படுவதில்லை. இந்த முறை நிகழ்ச்சியில் திரடப்படும் நிதி, பெண்கள் நல மேம்பாட்டிற்கான ஆராத்யா தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது" என்றார்.
'ஃபெம்-மே மிஸ்டர் பிரைட் ஆஃப் இந்தியா 2022' பட்டத்தை ஹைதராபாத்தை சேர்ந்த தினேஷ் ஆர்யா கைப்பற்றினார். மிஸ் பிரைட் ஆஃப் இந்தியா 2022 பட்டத்தை பெங்களூருவை சேர்ந்த வாத்சல்யா தட்டிச்சென்றார். வெற்றியாளர்களான தினேஷ் ஆர்யா மற்றும் வாத்சல்யா ஆகியோருக்கு விவேக் கருணாகரன், விஜய் கபூர், ரஞ்சித் கருணாகர் மற்றும் கருண் ராமன் ஆகியோர் மகுடம் சூட்டினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ