கோவை அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று நேற்று அதிகாலையில் கிடந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அரை நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் (CCTV Camera) பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் (Woman thrown from SUV) யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் சாலையில் கிடந்த சடலத்தின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்த நிலையில் இருந்தது.
ALSO READ | Imprisonment: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை!
இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தனியார் மருத்துவமனை அருகே ஒரு கார் செல்வதும், காரின் வலது பக்கத்தில் இருந்து பெண் சடலம் விழுந்த நிலையில் இரண்டு வாகனங்கள் உடலின் மீது ஏறி இறங்கி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
தற்போது அந்த பெண் விபத்தில் அடிபட்டு காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்டாரா அல்லது சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டு காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாரா அல்லது வேறு பகுதியை சேர்ந்த பெண்ணை திட்டமிட்டு கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது
பிணம் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் சேலை மற்றும் ஆடைகள் கிடந்தன. அவை கைப்பற்றப்பட்டு உள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. மேலும் இறந்த பெண்ணுக்கு 60 வயது வரை இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே காணாமல் போன 60 வயது பெண்களின் புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.
ALSO READ | ஆபாச படத்தை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR