பல நாள் கோரிக்கை நிறைவேறியது; வருகிறது லடாக் தினம்...

பல தசாப்தங்களாக லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. 

Last Updated : Oct 29, 2019, 02:22 PM IST
பல நாள் கோரிக்கை நிறைவேறியது; வருகிறது லடாக் தினம்... title=

பல தசாப்தங்களாக லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. 

பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றிய பின்னர், லடாக் தினம் நவம்பர் 1-ஆம் தேதி லேவில் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது.. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) லே இந்நிகழ்ச்சியை பெரிய அளவில் தயார் செய்துள்ளது. LAHDC லேவின் இந்த பிரமாண்டமான நிகழ்வில் பங்கேற்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் மத்திய அரசில் இருந்து ஒரு அமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அறிக்கையின்படி, 'லடாக் பால்ரம் டஸ்டன்' அதாவது பிரைட் ஆஃப் லடாக் திட்டம் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி லேயில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி இந்த நிகழ்வு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது, இதில் உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளம் ஆகியவற்றுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் தீம் மாற்றப்படுகிறது. ஆனால், இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

இதை மனதில் வைத்து, நவம்பர் 1-ஐ லடாக் தினமாக நிரந்தரமாக கொண்டாட LAHDC லே முடிவு செய்துள்ளார். பிரைட் ஆஃப் லடாக் திருவிழாவிற்கு பதிலாக நவம்பர் 1 லடாக் தினமாக அறிவிக்கப்படுவதாக LAHDC லே தலைவரும் தலைமை நிர்வாக ஆலோசகருமான கயல் பி வாங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக ஏழு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கிங் சிங்கே நம்கியாலின் சிலையும் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்., LAHDC கார்கிலின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News