திருப்பதி கோயிலில் நேற்று மட்டும் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று திருப்பதி மலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் உண்டியில் அதிகாலையில் இருந்து இதுவரை 2.48 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு விஐபி தரிசனம், ஆதார் அட்டை தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்திலேயே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.