சபரிமலையில் மண்டல பூஜைக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்படும். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். இவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலை கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கி 41 நாட்கள் நடைபெற்றுவந்த சபரிமலை மண்டல பூஜை நிறைவு பெற்றது. அந்த வகையில் நேற்று மாலை 5 மணியளவில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. முதன்மை பூசாரி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்க தலைமை பூசாரி மேற்பார்வையில் நடை திறப்பு சடங்குகள் நடைபெற்றன.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் குவிந்துள்ளனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று முதல் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டும். மேலும் ஜனவரி 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். பின்னர், 21-ஆம் தேதி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் சாத்தப்படும்.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.