ஆஸ்திரேலியா: முள் புதரில் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுமியை இரவு முழுவதும் அருகே இருந்து பாதுகாத்த நாய்க்கு காவல்துறையினர் சிறப்பு மரியாதை வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த ஆரோரா என்ற பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாட சென்றுள்ளது. அப்போது, சரியாக காது கேட்காத, கண் குறைபாடு கொண்ட அரோராவின் வீட்டு நாயான மேக்ஸ் அந்த குழந்தையை பின் தொடா்ந்து சென்றுள்ளது. விளையாட சென்ற குழந்தை வெகு நேரம் ஆகியும் குழந்தை வீடு திரும்பாததால் அவளது தாத்தா, பாட்டி தேடத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், தங்களின் வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து ஆரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி கூறினார். பின்னர், "நான் மலையை நோக்கி கத்திக் கொண்டே சென்றேன். மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த மேக்ஸ் நாய், ஆரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றது." என்றார் அவர்.
SUCH A GOOD BOY, MAX! He stayed with his 3-year-old human who was lost near Warwick last night while we frantically searched for her. For keeping her safe, you're now an honorary police dog. https://t.co/QiszGFP4gg via @ABCNews pic.twitter.com/xxRc6ndeaK
— Queensland Police (@QldPolice) April 21, 2018
வெள்ளி இரவு காணாமல் போன குழந்தையை சனிக்கிழமை காலை கண்டுபிடிக்கும் வரை சுமார் 16 மணி நேரம், குழந்தையை நாய் பாதுகாத்துள்ளது. அன்று இரவு வெப்ப நிலை 10 டிகிரி வரை குறைந்தபோதும் கூட, அரோராவை விட்டு நகராமல் மேக்ஸ் அங்கேயே இருந்ததாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா். குழந்தையை தேடுவதற்கான பணியில் அக்கம்பக்கத்தினர், தன்னார்வலர்ககள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மேக்ஸின் வீரச்செயலை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். காவல் துறையினா் மேக்ஸுக்கு 'கவுரவ போலீஸ் நாய்' என்று பட்டம் வழங்கியுள்ளது.