நுழைவு தேர்வுகான இலவச பயிற்சி வகுப்பு நடத்தும் Delhi Uni!

முதுகலை நுழைவு தேர்விற்கு ஆயுத்தமாகும் மாணவர்களுக்கு 2 வார சிறப்பு வகுப்புகளை நடத்த டெல்லி பல்கலை கழகம் முடிவு செய்துள்ளது!

Last Updated : May 20, 2018, 03:19 PM IST
நுழைவு தேர்வுகான இலவச பயிற்சி வகுப்பு நடத்தும் Delhi Uni! title=

முதுகலை நுழைவு தேர்விற்கு ஆயுத்தமாகும் மாணவர்களுக்கு 2 வார சிறப்பு வகுப்புகளை நடத்த டெல்லி பல்கலை கழகம் முடிவு செய்துள்ளது!

பெருளாதாரத்தி பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முதுகலை நுழைவு தேர்விற்கான இரண்டு வார சிறப்பு வகுப்புகள் நடத்த டெல்லி பல்கலை திட்டமிட்டுள்ளது.

இதன்படி வரலாறு, வனிகவியல், சட்டம், தொடர்பியல், வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவு மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த சிறப்பு வகுப்புகள் இந்தாண்டும் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளின் நோக்கமானது கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டெடுத்து அவர்களின் கல்வி ஆர்வத்தினை ஊக்குவிப்பதே ஆகும்.

இந்தாண்டிற்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் மாதம் துவங்கும் என தெரிகிறது. வனிகவியல், விலங்கியல், சட்டம், இதழியல் மற்றும் தொடர்பியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பிரிவிற்கான வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதியும். கணினி பிரிவிற்கு ஜூன் 4, கணிதப் பிரிவிற்கு ஜூன் 6-ஆம் தேதியும் வகுப்புகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், BPL, SC/ST, OBC  வகுப்பு மாணவர்கள், இடம்பெயர்ந்த கஷ்மீரி, கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஆகியோர் இந்த வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலை அதிகார பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனை வரும் மே 21, மே 28 நாட்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் டெல்லி பல்கலை வடக்கு கேம்பஸில் சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வரும் மே 30-ஆம் நாள் மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News