ஆப்கான் டெஸ்ட் தொடரில் சாஹா-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார்!

Last Updated : Jun 2, 2018, 03:05 PM IST
ஆப்கான் டெஸ்ட் தொடரில் சாஹா-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான Paytm டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என BCCI அறிவித்துள்ளது. IPL போட்டிகளின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சாஹா டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடுகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்ட்ட நிலையில் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டிருந்த விருத்திமான் சாஹா IPL போட்டிகளில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றார்.

எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சாஹா அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், IPL தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை அவருக்கு பதிலாக களமிறக்க திட்டமிட்டது. இந்நிலையில் தற்போது சாஹாக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விளையாடுவதை BCCI உறுதி செய்துள்ளது!

More Stories

Trending News