அடடா! தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்!

காஷ்மீரில் தாசில்தார் பணிக்கான தேர்வு எழுத கழுதைக்கு அனுப்பிய ஹால்டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Apr 28, 2018, 10:12 AM IST
அடடா! தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்!

காஷ்மீரில் தாசில்தார் பணிக்கான தேர்வு எழுத கழுதைக்கு அனுப்பிய ஹால்டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் அரசு சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாசில்தார் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வாணையம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிட்டுள்ளது. அப்போது ஒரு வினோத செயலாக கழுதை ஒன்றுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

அதில், கழுதையின் பெயர் 'பழுப்பு கழுதை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஹால்டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  என்ன தான் கேலி சம்பவமாக இது பார்க்கப்பட்டாலும், அரசு அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.   

இச்சம்பவம் குறித்து தேர்வாணைய அதிகாரிகளை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டனர்.

More Stories

Trending News