நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து கொண்டனர்.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதீபாவின் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,,,! மேல்மலையனூரை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த பிரதீபா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் துயரமடைந்ததாக தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது. நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.