எழுத படிக்கத் தெரிந்தால் போதும் - தமிழக அரசு பணி உங்களுக்கு

எழுத படிக்கத் தெரிந்திருந்தால்போதும் தமிழக அரசுப் பணி உங்களுக்கு கிடைக்கும் அரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2022, 04:22 PM IST
எழுத படிக்கத் தெரிந்தால் போதும் - தமிழக அரசு பணி உங்களுக்கு  title=

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சிறுபான்மை நலத்துறையில் காலியாக உள்ள இடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதியில் தூய்மை பணியாளர் இடம் காலியாக உள்ளது. இப்போது இந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

மேலும் படிக்க | லட்சத்தில் சம்பளம்... தமிழ் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.  இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் குறைவான அளவே காலிப்பணியிடங்கள் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வருகிற 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் http://www.tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று கொடுக்கப்படுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.  இதனை பூர்த்தி செய்த பின் அந்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.  மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்ககளை பெற http://www.tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரூ 44000 சம்பளத்துடன் ICAR வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்

காலிப் பணியிடம்: தூய்மை பணியாளர்
தகுதி : எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதும்
வயது வரம்பு : 18 - 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 30

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News