SBI PO 2020 Recruitment: தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) PO 2020 க்கான தேர்வு தேதிகளை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2020, 12:19 PM IST
  • SBI PO 2020 க்கான தேர்வு தேதிகளை அறிவித்தது SBI.
  • 2000 காலி இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்.
  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
SBI PO 2020 Recruitment: தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன title=

புதுடெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) PO 2020 க்கான தேர்வு தேதிகளை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் அறிவித்துள்ளது. SBI PO 2020-க்கு விண்ணப்ப படிவம் நவம்பர் 14 ஆம் தேதி ஆன்லைன் முறையில் வெளியிடப்படும் என்றும் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 4, 2020 என்றும் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது.  

SBI PO 2020 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் பொது / EWS / ஓ.பி.சி மாணவர்களுக்கு 750 ரூபாய் ஆகும்.  எஸ்.சி / எஸ்.டி / PWD மாணவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. SBI PO 2020 அறிவிப்பின் படி, ஆரம்பத் தேர்வு டிசம்பர் 31, 2020, 2021 ஜனவரி 2, 4 மற்றும் 5, ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஆர்வமுள்ளோர் SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்ப செயல்முறைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் மொத்தம் 2,000 வேலைகளுக்கான காலி இடங்கள் (Vacancy) நிரப்பப்படும். இவற்றில் 200 இடங்கள் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த நபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் ஆரம்ப கட்ட தேர்வு, முக்கிய தேர்வு, நேர்காணல் சுற்று மற்றும் தேர்வுக்கு முந்தைய பயிற்சி ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

ALSO READ: BSNL-ன் இந்த பம்பர் பிளானில் எக்கச்சக்க offers: Miss பண்ணிடாதீங்க

SBI PO ஆட்சேர்ப்பு 2020: தகுதி

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தங்கள் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு அல்லது செமஸ்டரில் இருப்பவர்கள் தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். எனினும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை அவர்கள் காண்பிக்க வேண்டும்.

தொற்றுநோய் காரணமாக பல கல்வி நிறுவனங்களில் முடிவுகள் நிலுவையில் இருப்பதால் இந்த ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4, 2020 –ன் படி வயது கணக்கிடப்படும்.

ALSO READ: SBI Pension Seva: ஓய்வூதியக்காரர்களுக்காக SBI வழங்கும் இந்த வசதி பற்றி தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News