NEET 2020: அட்மிட் கார்டுகள் இன்று வழங்கப்படலாம்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

NEET 2020 க்கான அட்மிட் கார்டுகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2020, 11:53 AM IST
  • தேசியத் தேர்வு முகமை செவ்வாயன்று NEET (UG) மற்றும் JEE (Main) இரண்டும் அட்டவணையின்படி நடத்தப்படும் என்று கூறியிருந்தது.
  • JEE தேர்வுக்கான நுழைவு அட்டைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
  • NTA செவ்வாய்க்கிழமை தேர்வு மையங்களின் பெயர்களையும் வெளியிட்டது.
NEET 2020: அட்மிட் கார்டுகள் இன்று வழங்கப்படலாம்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?  title=

NEET 2020 க்கான நுழைவு அட்டைகள் (Admit Cards) புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை (NTA) செவ்வாயன்று NEET (UG) மற்றும் JEE (Main) இரண்டும் அட்டவணையின்படி நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

JEE (Mains) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும். NEET செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. JEE தேர்வுக்கான நுழைவு அட்டைகள் (Admit Card) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

NEET 2020 அட்மிட் கார்டை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை இங்கே பார்க்கலாம்:

1.NTA NEET -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்:

https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx
 2. “NEET admit card 2020” –ல் கிளிக் செய்யவும்.

3. விண்ணப்ப எண் (Application number), பிறந்த தேதி மற்றும் Security Pin ஆகியவற்றை உள்ளிடவும்.

4. “Submit” –ஐ கிளிக் செய்யவும்.

5. NEET இன் அட்மிட் கார்டு திரையில் தோன்றும்

6. அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கவும்

7. NEET 2020 அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ALSO READ: இன்று முதல் விடைத்தாள் நகலை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: TNDGE

NEET அட்மிட் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்:

மாணவரின் பெயர்

NEET 2020 ரோல் நம்பர்

NEET பதிவு எண்

தேர்வின் தேதி மற்றும் நேரம்

தந்தையின் பெயர்

தாயின் பெயர்

பிறந்த தேதி

பாலினம்

பிரிவு / துணைப் பிரிவு

முகவரி

தேர்வின் மீடியம் (மொழி)

தேர்வு மையத்தின் எண் மற்றும் முகவரி

கையொப்பம்

மாணவர்கள் NEET 2020 இன் அட்மிட் கார்டின் வண்ண பிரிண்ட் (Colour Printout) எடுத்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதற்கான இடத்தில் ஒட்ட வேண்டும். பின்னர் மாணவர்கள் அட்மிட் கார்டில் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையெழுத்தைப் பெற வேண்டும்.

NTA செவ்வாய்க்கிழமை தேர்வு மையங்களின் பெயர்களையும் வெளியிட்டது. அதை இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்:

1. https://ntaneet.nic.in/ntaneet/Online/candidatelogin.aspx
 என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்.

2. விண்ணப்ப எண்ணை (Application Number) உள்ளிடவும்.

3. Password-ஐ அளிக்கவும்.

4. தேர்வு மையத்தை தெரிந்து கொள்ள லாக்-இன் செய்யவும். 

ALSO READ: TNEA: சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!

Trending News