குரூப் 4 தேர்வில் வெற்றிபெற எளிமையான டிப்ஸ்

குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கு சில டிப்ஸ்கள் உள்ளன. அதனை பின்பற்றினால் நீங்கள் கட்டாயம் வெற்றி பெற முடியும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2022, 04:35 PM IST
  • டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழி
  • திட்டமிட்டு படித்தால் எளிமையாக வெற்றி பெறலாம்
  • இலக்கை நிர்ணயித்து குறிக்கோளுடன் படியுங்கள்
குரூப் 4 தேர்வில் வெற்றிபெற எளிமையான டிப்ஸ் title=

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 (Group 4 Exam) ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 7,300 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். சராசரியாக ஒரு காலிப்பணியிடத்துக்கு 290 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும்.

பாடத்திட்டம்

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தால், சிலபஸில் இல்லாத விஷயங்களை நீங்கள் கூடுதலாக படிக்க நேரிடும். இதனால் உங்களின் நேரவிரயத்தை தவிர்க்க முடியாது. எதைப் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், நீங்கள் தயாராவதற்கு எளிமையாக இருக்கும். 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை

திட்டமிடல்

பாடத்திட்டத்தை தெரிந்து கொண்ட நீங்கள் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது சரியாக திட்டமிடல் வேண்டும். அதற்கேற்ப நாள்தோறும் பயிற்சி எடுக்க வேண்டும். படிக்க வேண்டும், அதனை திரும்ப ரிவிஷன் செய்ய வேண்டும்.தமிழ் பாடத்திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதில் இருக்கும் இலக்கணம் செய்யுள் ஆகியவற்றை பிரித்து மனப்பாடம் செய்ய வேண்டும். அதேபோல் சமூக அறிவியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படிக்க வேண்டும்

பயிற்சி

படித்துக் கொண்டிருக்கும்போதே நாள்தோறும் பயிற்சி எடுப்பது அவசியம். அதிகமாக படிக்கும்போது மறப்பது இயல்பு என்பதால், ரிவிஷன் செய்து கொள்வது அவசியம். தேர்வுக்கு குறைவான காலம் மட்டுமே இருக்கும் சூழலில் படிக்கும் பாடங்களில் கட்டாயம் தேர்வு எழுதி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்போது தான் குழப்பமில்லாமல் இருப்பீர்கள்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கட்ஆஃப் மதிப்பெண் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்

ஆலோசனை

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்தால் கட்டாயம் அதனை செய்யுங்கள். அவர்களிடம் இருந்து உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு ஐடியா கிடைக்கும். பேசும்போது உங்களுக்கு புதிய ஐடியா மற்றும் பாடத்திட்டம் பற்றிய தெளிவு, கேள்விகளை அணுகும்முறை உள்ளிட்டவைகளுக்கான ஆலோசனை கிடைக்கும். இவையெல்லாம் உங்களை தெளிவாக தேர்வை அணுகும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். இந்த டிப்ஸ்கள் பின்பற்றினால், தேர்வுக்கு தயார் ஆவதற்கு நிச்சயம் உதவும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News