தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு, டிஎன்பிஸ்சி தளத்தில் உள்ள One Time Registration எனப்படும் நிரந்தர கணக்கை தொடங்கி, அதில் தங்களின் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை தேர்வர்கள் பதிவேற்ற வேண்டும். மேலும், அந்த கணக்கில் இருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | TNPSC Exam: குரூப் 2, 2A இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - 5529 காலிப்பணியிடங்கள்
இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் டிஎன்பிஎஸ்சி, ஓடிஆர் எனப்படும் நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான காலவகாசமாக பிப்ரவரி 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை ஏற்கனவே அறிவித்திருந்தாலும், தேர்வர்களில் பலர் ஆதார் எண்ணில் இருக்கும் குளறுபடி, மொபைல் எண் சேர்த்தல் போன்றவைகளுக்கு இசேவை மூலம் இப்போது தான் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, குரூப் 2 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவசர அவசரமாக ஆதார் எண்ணில் இருக்கும் குளறுபடிகளை நீக்கி, தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
ஆதார் எண்ணில் மொபைல் எண் சேர்ப்பதற்கு குறைந்தபட்சம் 2 முதல் ஒரு வார காலம் ஆகும். இதனால், கடந்த சில நாட்களில் ஆதார் எண் குளறுபடிகளை சரிசெய்ய விண்ணப்பித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி ஓடிஆர் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால், இந்த காலவகாசத்தை நீடிக்க வேண்டும் என டிஎன்பிஸ்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குரூப் 2 தேர்வுகளுக்கு மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த காலவகாசத்தையும் குறிப்பிட்ட சில நாட்கள் நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR