ஆம் ஆத்மி கட்சி ஏழைகளுக்கு மட்டும் அல்லாமல், நடுத்தர குடும்ப மக்களுக்கு சேவை செய்து வருகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏழை மக்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கள் கட்சி ஏழை மக்களுக்கு மட்டும் அல்லாமல், நடுத்தர குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில் “மக்களில் சிலர் ஆம் ஆத்மி கட்சி ஏழைகளுக்கு மட்டுமே வேலை செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கு என்ன செய்துள்ளது…? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
I am glad that both poor as well as middle class people are benefitting from the hard and honest work of Delhi govt. https://t.co/gqYZEWgCnN
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 30, 2019
டெல்லியில் நடுத்தர குடும்பத்திற்காக 24 மணி நேர மின்சாரம், மலிவான விலையில் மின்சாரம், தண்ணீர், தனியார் பள்ளிகளில் கட்டணத்தை அதிகரிக்காமல் கவனித்துக் கொள்கிறோம். இத்தகு சேவைகள் அவர்களது கேள்விக்கு பதிலாய் அமையும் என்று தெரிவித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் “ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவருக்காகவும் அரசின் நேர்மையான பணியினால் பயனடைகிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள ஆம் ஆத்மி கட்சி வரும் 2020 களின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.