வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய தலைவர்களுடன் அமித்ஷா சந்திப்பு!

பாஜக தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை ஜார்க்கண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்களை சந்தித்தார்.

Written by - Mukesh M | Last Updated : Nov 8, 2019, 09:08 AM IST
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய தலைவர்களுடன் அமித்ஷா சந்திப்பு!

ஜார்க்கண்ட்: பாஜக தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை ஜார்க்கண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்களை சந்தித்தார்.

இரவு 10 மணிக்கு நிறைவடைந்த இந்த கூட்டத்தில் முதல்வர் ரக்பார் தாஸ், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் ஓம் மாத்தூர், கைலாஷ் யாதவ், பாஜக மாநிலத் தலைவர் லக்ஷ்மன் கிலுவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாநில தேர்தல் பொறுப்பாளர் ஓம் மாத்தூர் இல்லத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகள் தேர்தலுக்கான இடப் பகிர்வு சூத்திரம் குறித்து விவாதித்தன.

இந்திய பொருளாதரத்தை உயர்த்த ஒவ்வொரு மாவட்டமும் உதவ வேண்டும்: மோடி!

வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள மத்திய தேர்தல் குழுவின் (CEC) கூட்டத்தின் பின்னர் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 30-ஆம் நாள் துவங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து முறையே டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைப்பெற்று, பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய சட்டப்பேரவை ஆயுட்காலம் வரும் ஜனவரி 5, 2020 முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாக டிசம்பர் 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதுவரையிலும் கூட்டணி குறித்த உடன்படிக்கை எட்டாதநிலையில், தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த தேர்தலில், 2.26 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியிலிருந்து 5 MLA-க்கள், பாஜக-வில் இணைந்ததை தொடர்ந்து, சட்டசபையின் பாஜக-வின் பலம் 48-ஆக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News