Chhattisgarh Assembly Elections 2023: சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறினார். கரீப் கல்யாண் யோஜ்னா (PM Garib Kalyan Yojana) குறித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வரவேற்பு வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் போவதாக தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகளுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் காங்கிரஸ் ஒருபோதும் வழங்கியதில்லை என்று கூறினார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளை மதிப்பதில்லை என்றும் பாஜக மக்களுக்கான அரசு என்றும் பிரதமர் கூறினார்.
கரீப் கல்யாண் யோஜ்னா
துர்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் அன்பும் ஆசீர்வாதங்களும் எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்க பலத்தைத் தருவதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரசை குறிவைத்து பிரதமர் மோடி, 'காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளுக்கு ஏமாற்றத்தை தவிர எதையும் கொடுத்ததில்லை. காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளை மதிப்பதில்லை. காங்கிரஸ் மத்திய அரசில் இருக்கும் வரை ஏழைகளின் உரிமைகளை கொள்ளையடித்து, தனது கஜானாவை நிரப்பிக் கொண்டே இருந்தது’ என்று கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் செய்த ஊழல்கள்: பட்டியலிடும் பாஜக
ரூ.2,000 கோடி மதுபான ஊழல், ரூ.500 கோடி சிமென்ட் ஊழல், ரூ.5,000 கோடி அரிசி ஊழல், ரூ.1,300 கோடி கவுடா ஊழல், ரூ.700 கோடி டிஎம்எஃப் ஊழல். சத்தீஸ்கரை கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை. ஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரணை நடத்தி, உங்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று உறுதியளிப்பதாக பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.
கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த கரீப் கல்யாண் யோஜ்னா (இலவச ரேஷன்) திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு வகைகள் இலவசமாக வழங்கப்படும்.
அந்த்யோதயா அன்ன யோஜனா உள்ள குடும்பங்கள், முன்னுரிமை குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், ஒற்றைப் பெண்கள் அல்லது ஒற்றை ஆண்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர்.
மேலும் படிக்க | இந்த அரிய ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா? அப்போ நீங்க தான் லட்சாதிபதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ