ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸுக்கு எதிராக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய், தான் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் செய்திநிறுவனம் ANI-யிடம் தெரிவிக்கையல்., "ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில், ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸுக்கு எதிராக முன்னணி வகிக்கும் சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய்., "வரவிருக்கும் சுற்றுகளின் எண்ணிக்கையில் சுமார் 1500-2000 என்ற முன்னிலை தொடரும். 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வரும் நிலையில்., ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ் பெரும் பின்னடைவு சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய் அவருக்கு எதிராக ஆரோக்கியமான முன்னிலை வகித்து வருகின்றார். என்றபோதிலும் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான ரகுபார் தாஸ் மீண்டும் அந்த இடத்தை வெல்வேன் என தெரிவித்துள்ளார்.
Saryu Rai, independent candidate from Jamshedpur East, leading against Jharkhand CM Raghubar Das says, "Lead of about 1500-2000 will continue in the coming rounds of counting. I could win by a margin of 30,000 votes". #JharkhandElection2019 pic.twitter.com/0nm5Lcjd52
— ANI (@ANI) December 23, 2019
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், மாநிலத்தில் பாஜக-வின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம் என்பதையும் தெளிவாகக் கூறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய போக்குகளின்படி, தாஸுக்கு எதிராக ராய் 2604 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மாநிலத்தில் JMM தலைமையிலான கூட்டணிக்கு பின்னால் பாஜக பின்தங்கியிருக்கிறது.
இதனிடையே அனைவரது கண்களும் ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி மீது உள்ளன, அங்கு ரகுபார் தாஸ் தனது முன்னாள் அமைச்சரவை சகா சாரியு ராயிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார். போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில்., காங்கிரஸ் வேட்பாளர் கௌரவ் வல்லளளார்ப் தனது இடத்தை நிரூபித்து வருகின்றார்.
பாஜக மூத்த தலைவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து சாரியு ராய் ஒரு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 1995 முதல் வெற்றி பெற்று வரும் ரகுபர் தாஸ், இத்தொகுதி தனது கோட்டை என வர்ணித்து வருகின்றார். முன்னதாக கடந்த 2014 தேர்தலில் ராகுபார் தாஸ் காங்கிரஸின் ஆனந்த் பிஹாரி துபேவை 61.48 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.