தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி தனபால் செவ்வாய்க்கிழமை தாரபுரத்தில் சூரியநல்லூர் டோல் கேட் அருகே கார் விபத்தில் காயமடைந்தார்.
69 வயதான தனபாலுடன் மாநில அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இருந்தார். இருவரும் தமிழ்நாட்டின் தாரபுரத்தில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர்.
Tamil Nadu: Assembly Speaker P Dhanapal has been injured after his car met with an accident near Surianallur toll gate in Dharapuram.
P Dhanapal and State Minister SP Velumani were on their way to Dharapuram to attend PM Modi's election rally. pic.twitter.com/I6vhMW23lh
— ANI (@ANI) March 30, 2021
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பார். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க, அதிமுக, பாஜக (BJP) ஆகிய கட்சிகளின் பல்வேறு அமைச்சர்களும் இன்று தாராபுரம் சென்றுள்ளனர்.
பிரதமர் மோடியுடன் (PM Modi) ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பேச உள்ளனர். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சபாநாயகர் தனபால் ஆகியோர் கார் மூலம் தாராபுரத்திற்கு சென்றனர்.
தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி ஆகியோரின் வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. விபத்தில் 3 கார்கள் சேதமடைந்தன. கார்களின் ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமைச்சர் வேலுமணி, சபாநாயகர் தனபால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் (TN Assembly Election) ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடைபெறும். பாஜக-அதிமுக கூட்டணிக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விபத்து குறித்த மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: தொண்டர்களிடையே உற்சாகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR