தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளன. தெர்தல் பரப்புரைகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தேசிய தலைவர்களும் தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆளும் ஆதிமுக-பாஜக (BJP) கட்சிகளின் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார். முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் தமிழகம் வந்து வாக்கு சேக்ரித்தனர். பிரதமரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தமிழகம் வரவுள்ளனர். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மெற்கொள்ள காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்.
பிரதமர் மோடி (PM Modi) இன்று முதலில் கேரளத்தில் பிரச்சாரம் மெற்கொள்வார். பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். அதன் பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.40 மணியளவில் தாராபுரத்திற்கு பிரதமர் வருவார். அங்கு பிரதமரின் பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில் பிரதமர் உரையாற்றுவார். பாஜக சார்பில் தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகனுக்காக அவர் வாக்கு சேகரிப்பார்.
ALSO READ: TN Election 2021: பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பாஜக-வுக்கு தமிழகத்தில் (Tamil Nadu) ஆதரவு அதிகரித்துள்ளது. பெரும் அதிசயத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும், பாஜக-வைப் பொறுத்த வரை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஒரு பெரிய மாற்றம் முடிவுகளில் காணப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாஜக தொண்டர்கள் பிரதமரின் வருகைக்காக உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாராபுரத்திலிருந்து கோவை விமான நிலையத்துக்கு செல்லும் பிரதமர் தனி விமானம் மூலம், சென்னை வந்து, 3.45 மணியளவில் புதுச்சேரிக்கு செல்கிறார். புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிப்பார். இங்கு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணியளவில் பிரதமர் மோடி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: பங்குனி உத்திரம்: வெற்றி வேல்! வீர வேல்! என அமித் ஷா, ஜே.பி.நட்டா தமிழில் வாழ்த்து