மகாராஷ்டிராவின் அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க அரசியல் நிலைமையை எதனுடன் ஒப்பிட இயலும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "மகாராஷ்டிராவின் அருவருப்பான மற்றும் வெறுக்கத்தக்க அரசியல் நிலைமையை ஒருவர் எதனுடன் ஒப்பிட இயலும்.
இதை ஜனநாயகத்தின் கொலை என்று சொல்வது போதுமானதாக இருக்காது.
சட்டக் கொள்கைகளும் அரசியல் ஒழுக்கமும் இன்று சந்தர்ப்பவாத அரசியலின் கைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளால் நம் நாட்டின் மதிப்பிற்குரிய அரசியலமைப்பு கொள்கைகள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளன.
Our country's revered constitutional principles have been thrown to the bin by these actions.
Those who have attained power by misusing the offices of the President and Governor and by indirect threats of agencies have effectively sounded the death knell for democracy.
2/2
— M.K.Stalin (@mkstalin) November 23, 2019
ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் அலுவலகங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும், ஏஜென்சிகளின் மறைமுக அச்சுறுத்தல்களாலும் அதிகாரத்தை அடைந்தவர்கள் ஜனநாயகத்திற்கான மரண தண்டனையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளனர்." என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக., மகாராஷ்டிராவில் இன்று யாரும் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரும், பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.
நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இன்று காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், NCP கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்(54) தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.