Zee Digital: மூன்றாண்டுகளில் ஜீ டிஜிட்டலில் 1 பில்லியன் பயனர்கள்! டாக்டர் சுபாஷ் சந்திராவின் கனவு!

இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியா, டிஜிட்டல் தளத்தில் மூன்றாண்டுகளில் 1 பில்லியன் பயனர்களை ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா..

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 16, 2022, 10:44 AM IST
  • இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகம்
  • மூன்றாண்டுகளில் ஜீ டிஜிட்டலில் 1 பில்லியன் பயனர்கள் என்பது இலக்கு
  • மிக விரைவில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய செய்தியை எதிர்பார்க்கலாம்
Zee Digital: மூன்றாண்டுகளில் ஜீ டிஜிட்டலில் 1 பில்லியன் பயனர்கள்! டாக்டர் சுபாஷ் சந்திராவின் கனவு! title=

Essel Group Chairman Dr Subhash Chandra's Interview: பிரபலமான ஜீ குழுமத்தின் ஒரு சேனலான ஜீ பிசினஸ் நிர்வாக ஆசிரியர் அனில் சிங்வி, இன்று (2022, மார்ச் 16 புதன்கிழமை) எஸ்சல் குழுமத்தின் மாண்புமிகு தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான டாக்டர் சுபாஷ் சந்திராவிடம் நேர்காணலில் உரையாடினார்.

இந்த சிறப்பு உரையாடலில், எஸ்ஸெல் குழுமத் தலைவர் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வெளிப்ப்டையாக பேசினார். அவற்றில் முக்கியமானவை, ஜீ மீடியாவின் எதிர்காலத் திட்டங்கள், ZEEL-SONY இணைப்பு மற்றும் ஜீ குழுமத்தின் எதிர்கால இலக்குகள் ஆகியவை அடங்கும்.

Zee குழுமத்தின் எதிர்கால திட்டங்கள்

துரிதமாக மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், Zee குழுமத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய டாக்டர் சுபாஷ் சந்திரா, "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டின் சூழல் மிகவும் சாதகமாக மாறிவருகிறது. நாங்கள் தொடர்ந்து பல முனைகளில் பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

subash chandra

'Metaverse' or 'Mayaverse' - இணையத்தின் சகாப்தம்

மெட்டாவர்ஸ், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் NFT பற்றிப் பேசிய டாக்டர் சந்திரா, "இணையத்தின் சகாப்தம் 'மெட்டாவர்ஸ்' உடையது என்பதால் இதை 'மாயாவர்ஸ்' ('Mayaverse' - Era of internet) என்று அழைக்கிறேன்" என்றார்.

Zee டிஜிட்டல் துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் பயனர்கள் இலக்கு 

ஜீ மீடியாவின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் இருப்பதாக டாக்டர் சந்திரா பெருமையுடன் குறிப்பிட்டார், மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் பயனர்களை சேர்க்க ஜீ குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது. "டிஜிட்டல் உள்ளடக்கத்தை பணமாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்," என்று டாக்டர் சுபாஷ் சந்திரா மேலும் கூறினார்.

மேலும் படிக்க | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

கடன் தீர்வு

ஜீ குழுமத்தின் கடன் தீர்வு மற்றும் தற்போதைய கடன் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த ​டாக்டர் சுபாஷ் சந்திரா, "நாங்கள் ஊக்குவிப்பாளர் மட்டத்தில் 92% கடனைக் குறைத்துள்ளோம். ஊக்குவிப்பாளர் மட்டத்தில் மீதமுள்ள கடன்களை ஓரிரு மாதங்களில் தீர்த்துவிடுவோம்" என்று தெரிவித்தார்.

கடன் விவகாரம் பற்றி மேலும் பேசிய டாக்டர் சுபாஷ் சந்திரா, "இன்ஃப்ரா பிசினஸில் இறங்கியது தவறு" என்று உணர்ந்துவிட்டதாகக் கூறினார்.

டிஷ் டிவி-யெஸ் பேங்க் விஷயம்

டிஷ் டிவி-யெஸ் வங்கி விவகாரத்தில் (Dish TV-Yes Bank matter) பேசிய டாக்டர் சந்திரா, "யெஸ் வங்கியின் முந்தைய நிர்வாகம் ஜீ குழுமத்திடம் மோசடி செய்தது" என்று கூறினார்.

"டிஷ் டிவி-யெஸ் வங்கி விவகாரத்தில், பெரும்பாலான ஊடகங்களில் சரியான தகவல்கள் வெளிவரவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | ZEE குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்!

ZEEL-சோனி இணைப்பு

ZEEL-Sony Merger பற்றி குறிப்பிட்ட எஸ்செல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா, "Zee Entertainment மற்றும் Sony இணைப்பு சரியான திசையில் நகர்கிறது. ஒழுங்குமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, இணைப்பு நிறைவடையும்" என்று தெளிவுபடுத்தினார்.

புதிய வியாபாரம்?

ஜீ குழுமம் ஏதேனும் புதிய தொழிலைத் தொடங்கத் திட்டமிடுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ​​எஸ்செல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா, "நாங்கள் பணத்திற்காக எந்தத் தொழிலையும் தொடங்கவில்லை. நாங்கள் எப்போதும் வியாபாரத்தின் மூலம் புதிதாக ஏதாவது செய்ய முயற்சித்தோம்" என்று தங்களின் அடிப்படை நோக்கத்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க | வர்த்தக உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ZEEL-Sony இணைப்பு உறுதியானது

ஜீ மீடியாவின் செயல்திறன் - WION, Zee டிஜிட்டல்

ஜீ குழுமத்தின் செயல்திறனைப் பற்றிப் பேசிய எஸ்செல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

"Zee Media இன் டிஜிட்டல் தளங்களில் 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர். வியான் (WION) ஆசியாவின் முதல் உலகளாவிய நெட்வொர்க் - இது இந்தியாவின் நம்பர் ஒன் சர்வதேச சேனல் ஆகும்.. WION பார்வையாளர்களில் 58% வெளிநாட்டில் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்" என்று ஜீ குழுமத் தலைவர் தெரிவித்தார்.

"யூடியூப்பில் பிபிசியை விட, ஜீ குழுமத்தின் WION முன்னணியில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், வியானில் 500 மில்லியன் பார்வையாளர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்" என்று டாக்டர் சந்திரா கூறினார்.

subash chandra

கடந்த ஒரு வருடத்தில் India.com, Zeenews.com ஆகிய இரண்டு தளங்களில் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் (MAUs) 100 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக வளர்ந்துள்ளதாக டாக்டர் சுபாஷ் சந்திரா கூறினார். நாட்டின் செய்தி ஊடகங்களில் நம்பர் 1 என்ற இடத்தில் ஜீ குழுமம் உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

பங்குதாரர்களுக்கு செய்தி

பங்குதாரர்களுக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ​​டாக்டர் சந்திரா, "சில பங்குதாரர்கள் வருத்தமடைந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள் எங்கள் பங்குதாரர்களின் நலன்களைப் புறக்கணிக்கவில்லை" என்றார்.

ஒவ்வொரு முறையும் அவர் அதிக வலிமையுடனும் சக்தியுடனும் மீண்டு வருவது பற்றி கேட்டபோது, அதற்கு புன்னகையுடன் பதிலளித்த ​​டாக்டர் சுபாஷ் சந்திரா, "மிக விரைவில் ஏதாவது புதிய செய்தி வரும் - இந்த முறை அது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | ZEE குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News