ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : May 29, 2024, 01:38 PM IST
  • தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி.
  • 3வது இடத்தில் களமிறங்கும் சஞ்சு சாம்சன்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை.
ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11! title=

2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி தற்போது அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கடைசியாக 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போது வரை வெல்ல முடியவில்லை, எனவே இந்த முறை எப்படியாவது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்திற்கு எதிராக விளையாட உள்ளது. அதன் பிறகு அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. பின்பு, ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்காவையும், ஜூன் 15 ஆம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது. 

மேலும் படிக்க | ரியான் பராகை காட்டிக் கொடுத்த history என்ன சிம்ரன் இது!!

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற இந்தியா முதல் இரண்டு இடங்களை அடைய வேண்டும். கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த், துபே, ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டனர். இன்று ஹர்திக் பாண்டியா அணியுடன் இணைந்து டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், விராட் கோலி இன்னும் அணியில் சேரவில்லை. மேலும் ஜூன் 1 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தையும் மிஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. இது சிலரை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஐபிஎல்லில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அனுபவம் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடமில்லை.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலக கோப்பையில் இளம் அணியை அனுப்ப தயாராக இல்லை. எனவே தான் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங், ரியான் பராக் போன்ற வீரர்கள் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் பார்மில் இல்லை என்றாலும் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர். இந்திய அணியின் புதிய ஓப்பனிங் பேராக ரோஹித் மற்றும் கோலி இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறுவது கேள்விக்குறி ஆகி உள்ளது. மேலும் 3வது இடத்தில் சஞ்சு சாம்சனும், அடுத்து சூர்யகுமார் யாதவும் களமிறங்க வாய்ப்புள்ளது.

5வது இடத்தில் துபே அல்லது ரிஷப் பந்த் களமிறங்குவார்கள். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இடம் பெறுவார்கள். பிறகு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் சாஹலும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற உள்ளனர். அந்த மைதானங்களுக்கு ஏற்ப கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

டி20 உலகக் கோப்பைக்கான உத்ததேச ப்ளெயின் 11

ரோஹித் சர்மா, விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்/சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜப்சிரித் பும்ரா, முகமது சிராஜ்

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தான்...!? வெளியான பரபரப்பு தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News