முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!

Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2024, 09:30 AM IST
  • முகத்தை கழுவும் போது செய்யும் தவறுகள்.
  • இதனால் முக அழகும் கெட்டுவிடும்.
  • அந்த தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்! title=

Face Washing Mistakes: அனைவருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல தோல் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முகத்தில் சிறு பருக்கள் வந்தால் கூட இன்றைய காலத்தில் பெண்கள் மிகவும் சோர்ந்து போய்விடுகின்றனர். தங்களது முகத்தில் எந்த ஒரு புள்ளி அல்லது கறைகள் இருக்க கூடாது என்று விரும்புகின்றனர். இதற்காக சிறுவர்கள் முதல் வயதான பெண்கள் வரை பல அழகு சாதனப் பொருட்களையும் குறிப்புகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் இவை ஒரு சிலருக்கு பலனளிப்பதில்லை. 

மேலும் படிக்க | கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. உஷார் மக்களே!!

நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளினால் சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த சிறிய தவறுகள் முகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது தவிர, முகத்தை கழுவும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இதனாலும் உங்கள் முக அழகு கெட்டுவிட வாய்ப்புள்ளது. தினமும் முகத்தை தண்ணீரில் கழுவும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்: தினசரி முகத்தைக் கழுவுவதற்கு முன் உங்கள் கைகளை முதலில் நன்கு கழுவி கொள்ளுங்கள். அழுக்கு நிறைந்த கைகளால் முகத்தை கழுவினால் அதுவே உங்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் கைகளில் ஏதேனும் எண்ணெய் அல்லது ஆளுக்கு ஒட்டி இருந்தால் முதலில் அதனை சுத்தப்படுத்துங்கள். அதன் பின்னர் உங்கள் முகத்தை கழுவலாம். 

சோப்பு: முகத்திற்கு எப்போதும் சோப்பு போட கூடாது. ஏனெனில் சோப்பில் கடுமையான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது தவிர, சோப்பில் அதிக அளவு கெமிக்கல் உள்ளது. இது சருமத்தை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே, முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுவது நல்லது. ஃபேஸ் வாஷ் இல்லாத சமயங்களில் உளுந்து மாவை பயன்படுத்தலாம்.

வெண்ணீர்: அதே போல முகத்திற்கு சூடான தண்ணியை பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. மேலும் குளிர்ந்த நீரிலும் முகத்தை கழுவ கூடாது. இதனால் முகம் வறண்டு போக அதிக வாய்ப்புள்ளது. லேசான சருமம் கொண்டவர்கள் மறந்தும் கூட வெந்நீரை கொண்டு முகத்தைக் கழுவக் கூடாது. இது அவர்களின் முகத்தை சேதப்படுத்தும். கண்டிப்பாக தினசரி முகத்தை நான்கைந்து முறை கழுவ வேண்டும். அதேசமயம் நாள் முழுக்க கழுவிக்கொண்டும் இருக்க கூடாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Diabetes Control: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் சில ‘மேஜிக்’ மசாலாக்கள்..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News