LoCயில் தீவிரவாதிகள் அதிகரிப்பால் இந்திய ராணுவம் குவிப்பு

லடாக்கில், கால்வான் முதல் பாங்கோங் த்சோ வரை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகள் பெருமளவில் குவிந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2020, 09:29 PM IST
LoCயில் தீவிரவாதிகள் அதிகரிப்பால் இந்திய ராணுவம் குவிப்பு title=

புதுடெல்லி: லடாக்கில், கால்வன் பள்ளத்தாக்கிலிருந்து பாங்கோங் த்சோ வரை சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏராளமான பயங்கரவாதிகள் இருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவும் சதிச்செயலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்குள் நுழைவதற்காக, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள போர்நிறுத்தத்தை மீறிவருவதோடு, எல்லைப்பகுதிகளில் உள்ள ஏவுதளத்தில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதாக நாட்டின் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை கூறுகிறது.

ஜீ நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த பிரத்யேக தகவல்களின்படி, பல பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்புப் படையினரைத் தாக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் BAT (பார்டர் ஆக்சன் டீம்) ஐ செயல்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும் பல பயங்கரவாத குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read | கர்த்தார்பூர் வழித்தடத்தை இரண்டு நாள் நோட்டீசில் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கம் என்ன?

பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை பயங்கரவாதக் குழுக்கள் தீவிரமாக செயல்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். 

1. குரேஜ் செக்டர் (Gurez Sector) – குரேஜ் செக்டரை ஒட்டியுள்ள ஏவுதளத்தில், 25 முதல் 30 லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாதக் குழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2. மச்சில் செக்டர் (Machil Sector)- மச்சில் செக்டரை ஒட்டியுள்ள இடத்தில் அல்-பதர், ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளின் 40 க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன.

3. கெரன் செக்டர் (Keran Sector) –கெரன் செக்டருக்கு அருகிலுள்ள பகுதியில், TRF  என்னும் பயங்கரவாத மறுமலர்ச்சி முன்னணி (டி.ஆர்.எஃப்), லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் உட்பட 70 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் குப்வாராவுக்குள் நுழைவதற்காக சதி செய்துக் கொண்டிருக்கின்றனர். 

4. தாங்தார் செக்டர் (Tangdhar Sector)- தாங்தார் செக்டருக்கு அருகில் 50 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் குவிந்துள்ளனர். இதில் அல்-பதர் மற்றும் லஷ்கரைச் பயங்கரவாதக் குழுவினர் உள்ளனர். இந்தப்  பகுதிகளில் பாகிஸ்தான் ‘எல்லை நடவடிக்கைக் குழு’ மூலம் (BAT (Border Action Team)) பிரதான நடவடிக்கை எடுப்பதற்கு  தயாராகி வருகிறது.

5. நெளகம் செக்டர் (Naugam Sector)-  நெளகம் பகுதிக்கு அருகிலுள்ள லாஞ்சிங் பேட் (Launching pad) எனப்படும் ஏவுதளத்தில் சுமார் 10 பயங்கரவாதிகள் அடங்கிய குழு இருப்பது தெரியவந்துள்ளது.

Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்

6. ஊரி செக்டர் (Uri Sector) - ஊரி செக்டருக்கு அருகிலுள்ள இடத்தில் சுமார் 25 பயங்கரவாதிகள் குவிந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து இந்திய பாதுகாப்புப் படையினர் மீது ‘எல்லை நடவடிக்கைக் குழு’ மூலம் (BAT (Border Action Team))  தாக்குதல் நடத்த இந்த பயங்கரவாதிகள் ஆயத்தமாக உள்ளனர். 

7. பூஞ்ச் (Poonch) – பூஞ்ச் பகுதியில் உள்ள ​​பக்கத்திலுள்ள இடங்களில், லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் குழுவினர் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.  இங்கு 50 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

8. பிம்பர் கலி (Bhimber Gali) –பிம்பர் கலி என்ற பகுதியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் 40 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்.

9. லஷ்கர் மற்றும் ஜெய்ஷின் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிருஷ்ணா பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள இடங்களில் உள்ளனர், அவர்கள் எல்லையில் அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றனர். 

10. ஊடுருவல் சதிகளில் ஈடுபட்டுள்ள 30-40 தீவிரவாதிகள் அடங்கிய குழுவும் நவ்ஷெரா, அக்னூர் மற்றும் டிராஸ் துறைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

Also Read | கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்த ஆண்டு இதுவரை ஜம்மு-காஷ்மீரில் 108 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதக் குழுவினருக்கு மிகப் பெரிய அடியை இந்தியா கொடுத்துள்ளது. இது அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். 

சீனாவுடனான இந்தியாவின் பதற்ற நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முனைந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்திய ராணுவம் கட்டுப்பாட்டுக் கோடு அல்லது எல்.ஏ.சி எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டு வரி (Line of Actual Control (LAC))யில் மிகவும் கவனத்துடன் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் புதிய பாதை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதையும் இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது சட்டப்பிரிவு விலக்கப்பட்டதற்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத சதித்திட்டங்களை நடத்த முடியாமல் திகைத்துப் போயிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 111 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அழித்துவிட்டனர். பயங்கரவாதக் குழுக்களின் உயர்நிலைத் தலைவர்கள் பலரை பாதுகாப்புப் படையினர்  ஒழித்துவிட்டனர்.  காஷ்மீரில் பயங்கரவாதத் தீ கட்டுக்குள் வந்துவிட்டது.   காஷ்மீரில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையை கெடுக்க விரும்பும் பாகிஸ்தான்,  காஷ்மீருக்குள் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.     

Trending News