Zee Hindustan Exclusive: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே புரட்சி பாரதம் கட்சியினர் பேனர் வைத்ததால் அவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்துறையினரால பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. பேனர் வைப்பது தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருப்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனால் கீழ்வைத்தினன்குப்பம் எம்.எல்.ஏ-வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி வெள்ளவேடு காவலர் (TN Police) திருப்பதியை தொலைப்பேசியில் அழைத்து மிரட்டும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. “மற்றவர்கள் பேனர் வைக்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு நாங்கள் வைத்தால் மட்டும் வழக்கா?” என ஜெகன்மூர்த்தி அதில் திருப்பதியை மிரட்டுகிறார்.
இது நான் பிறந்த ஊரு. இங்கே பேனர் வைக்காமல் எங்கே போய் வைப்பது என ஜெகன் மூர்த்தி பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் "நீ எங்கெல்லாம் பணம் வாங்குறனு எனக்கு தெரியும்" என காவலர் திருப்பதியை மிரட்டும் ஜெகன் மூர்த்தி, "இனி ஜென்மத்துக்கும் நீ டியூட்டிக்கே வரமுடியாதபடி பண்ணிடுவேன்" என்கிறார்.
#ZeeHindustanExclusive : கீழ்வைத்தினன்குப்பம் எம்.எல்.ஏ-வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி வெள்ளவேடு காவலர் திருப்பதியை தொலைப்பேசியில் மிரட்டும் ஆடியோ.
பேனர் வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததால் மிரட்டல்.
இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். pic.twitter.com/rcnZQ2qJYH
— ZEE Hindustan Tamil (@ZHindustanTamil) September 11, 2021
ALSO READ: ஜாதிக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்: சீமான்
செய்த குற்றத்துக்கு நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் கடமைதானே? சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரை இப்படி மிரட்ட ஆரம்பித்தால் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கும்? பூவை ஜெகன்மூர்த்தி அதிமுக (AIADMK) சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்; 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR