ஜாதிக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்: சீமான்

சமீபத்தில் பெரியாருக்கு 135 அடியில் திருச்சியில் சிலை வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2021, 10:49 AM IST
  • பெரியாரை போலவே மற்ற பல தலைவர்களும் ஜாதியை ஒழிக்க போராடியுள்ளனர்.
  • வ.உ.சி, திரு.வி.க, மறைமலை அடிகள் போன்ற முன்னோர்கள் மறைக்கப்படுகின்றனர்.
  • சீமானை பற்றி பேசினால் தலைவர் பதவி உறுதியாகிவிடும் என்று ஜோதிமணி நினைக்கிறார்.
ஜாதிக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்:  சீமான் title=

சமீபத்தில் பெரியாருக்கு 135 அடியில் திருச்சியில் சிலை வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் மீது கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதற்கு சிலை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவே, அது தொடர்பாக ‘ராவணா’ என்ற யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார்.

”நாங்கள் ஜாதிக்கு எதிராக பெரியார் போராடினார் என்பதை ஏற்கிறோம். ஆனால் பெரியார்தான் போராடினார் என்பதை எதிர்க்கிறோம்” என்று சீமான் பேசியுள்ளார். பெரியாரை போலவே மற்ற பல தலைவர்களும் ஜாதியை ஒழிக்க போராடியுள்ளனர் என்ற தொணியில் சீமான் பேசியிருக்கிறார். வ.உ.சி, திரு.வி.க, மறைமலை அடிகள் போன்ற முன்னோர்கள் மறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ | தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை விஷம் குடி என்று சீமான சொன்னதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அதுகுறித்து ஜோதிமணியும் வருத்தம் தெரிவித்திருந்தார். அதுகுறித்து பேசிய சீமான், நான் வேறு இடத்தில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், ஜோதிமணிக்கு தமிழக காங்கிரஸ் பதவி கிடைக்கவிருப்பதாக தகவல் இருப்பதால் தன்னைப் பற்றி தவறாக பேசுகிறார் எனவும் கூறினார். சீமானை பற்றி பேசினால் தலைவர் பதவி உறுதியாகிவிடும் என்று ஜோதிமணி நினைப்பதாகவும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுவரை விடுதலை செய்யப் போகிறேன் என்று சொன்னபோது நான் மட்டும்தான் அவருக்கு ஆதரவாக நின்றேன். மற்ற தமிழ் தேசிய தலைவர்கள் திமுக கூட்டணியில் இருந்ததால் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர்கள் ஆதரவளித்திருந்தால் ஜெயலலிதா அன்றே ராஜீவ்காந்தி கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்திருப்பார் என்று சீமான் கூறினார்.

ALSO READ | துபாயில் சிகிச்சைக்கு பின், சென்னை திரும்பினார் கேப்டன் விஜய்காந்த்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News