ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே விவசாயிகள் தங்களது போராட்டத்தை துவக்கியுள்ளனர் என மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங் தெரிவித்துள்ளார்!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. அதில், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், உத்திர பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, நடந்த போராட்டத்தில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில், 10 நாட்கள் எதிர்ப்பு போராட்டத்தினை கடந்த 1-ம் தேதி துவக்கினர். விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியது, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்காக திட்டங்களை மத்திய அரசு செய்து கொண்டு தான் வருகிறது.
பண்ணைத் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் வேளாண் உற்பத்தித்திறன் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இதனை விவசாயிகள் உணராமல் ஏதோ ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டத்தை நடத்துகின்றனர் என்றார்.