5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp!

பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் 5 புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : May 30, 2018, 01:29 PM IST
5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp! title=

பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் 5 புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது!

மொபைல் போன் இல்லாமல் தற்போது மனிதர்கள் வாழ்வது கடினமாகிவிட்டது, அதே வேலையில் WhatsApp இல்லாத போனை பார்பது அரிதாகிவிட்டது. தனது வாடிக்கையாளர்களை கவர WhatsApp-ம் பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய 5 வசதிகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

1. WhatsApp குரூப் காலிங் வசதி

ஆண்ட்ராய்ட் 2.18.145+ மற்றும் iOS 2.18.52 இயங்குதளத்திற்கு தற்போது குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக தனி நபர்களுடன் வீடியோ கால் செய்யும் வசதி செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது பல நண்பர்களுடன் வீடியோ கால் செய்ய குரூப் காலிங் வசதி அறிமுகம் செய்துள்ளது!

2. Click to Chat

வாடிக்கையாளர்கள் தங்களது தொடர்புகளில் சேர்க்கப்படாத நபர்களுக்கு, தனியாக செய்திகளை அனுப்ப WhatsApp வழி வகுக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் "api.whatsapp.com/send?phone=" என்ற இணைப்பினை தங்களது ஸ்மார்ட்போனில் திறந்து அதில் புது நபர்களுக்கு செய்திகளை அனுப்பலாம்.

3. நீக்கப்பட்ட மீடியாக்களை மீட்டெடுத்தல்.

பொதுவாக WhatsApp-ல் அனுப்பப்படும், பெறப்படும் வீடியோ போட்டோக்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம்.

ஆனால் இந்த குறையினை போக்கும் வகையில் தற்போது WhatsApp புதிய அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது. WhatsApp-ல் பெறப்பட்ட, அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை திரும்ப பெற இந்த அம்சம் உதவுகிறது.

பொதுவாக WhatsApp-ல் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு WhatsApp ஆன்லைன் நிணைவகத்தில் சேமித்து வைக்கப்படும். எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது re-download என்னும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் என தெரிவித்துள்ளது.

இந்த வசதியானது WhatsApp-ன் 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய WhatsApp பதிப்பினை இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் Goole PlayStore-ல் சென்று அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

4. Facebook / Instagram செயலிகளில் Playback

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் அனுப்பப்படும் வீடியோக்களை WhatsApp-லேயே நேரடியாக பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுப்பப்படும் லிங்குகளை திறக்க வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேற வேண்டாம்.

5. Media visibility

WhatsApp-ல் பகிரப்படும் மீடியா பதிவுகளை தங்களது மொபைல் கேலரியில் வாடிக்கையாளர்கள் சேமித்துக்கொள்வது வழக்கம். ஆனால் பெரும்பாலும் இந்த அம்சத்தினை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை காரணம், தனிப்பட்ட விசமாக பகிரப்படும் மீடியா கன்டன்களை கேலரியில் சேமிப்பதன் மூலம் தேவையற்றோர் அதனை பார்க்ககூடும் என்பதால்.

எனவே இந்த குறைப்பாட்டிற்கு தீர்வு கானும் வகையில் தற்போது WhatsApp தனது பீட்டா வெர்ஸன் 2.18.159 பதிப்பில் மீடியாக்களை கேலரியில் மறைப்பதற்கான வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களது மீடியா பதிவுகளை கேலரியில் காண்பிக்காமல் மறைத்து வைத்துக்கொள்ளலாம்.

இந்த புதிய பதிப்பில் Setting - “Media visibility” என்னும் வசதியின் கீழ் இந்த அம்சத்தினை செயல்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் WhatsApp திறக்கப்படாமல் இந்த மீடியாக்களை கேலரியில் பார்பது என்பது கடினம்.

Trending News