Clove Remedy: தினம் இரண்டு கிராம்பு ஆரோக்கியத்திற்கு அருமருந்து

Clove and Health: உணவே மருந்தாகலாம் ஆனால் மசாலா மருந்தாகுமா? ஆகும் என்பதற்கு அட்டகாசமான உதாரணம் கிராம்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2022, 08:11 PM IST
  • தூங்கும் முன் கிராம்பு உண்பது சளியை சரிப்படுத்தும்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு
  • சைனஸ் மற்றும் ஆஸ்துமாவுக்கு சவால் விடும் கிராம்பு
Clove Remedy: தினம் இரண்டு கிராம்பு ஆரோக்கியத்திற்கு அருமருந்து title=

கிராம்பின் ஆரோக்கிய பண்புகள்: மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால், மனிதர்கள் மட்டும் நவீன உலகில் வாழும் உயிரினமாகவும், தொழில்நுட்பத்தால் இயற்கையை விட்டு வெகுதொலைவில் வந்து விட்ட உயிரினமாகவும் மாறிவிட்டார்கள்.

எனவே, இயற்கையிலேயே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் செயற்கையாகவே பெற வேண்டியிருக்கிறது. ஆனால், இயற்கையின் கொடைகள் அற்புதமானவை. இயற்கையில் விளையும் பொருட்களே, நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

வீட்டிலேயே உணவுக்கு பயன்படுத்தும் சில பொருட்களே நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதில் கிராம்புக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய சமயலறைகளில் நீங்கா இடம் பிடித்துள்ள கிராம்பு பல அற்புதமான ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டதாகும். 

மேலும் படிக்க | ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு  வரமாகும் கிராம்பு பால்

உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும் கிராம்பு, சுவையான மசாலா ஆகும். பல் வலிக்கும், வயிறு மற்றும் தொண்டைக்கும் ஆரோக்கியத்தையும் ஆசுவாசத்தையும் அளிக்கிறது கிராம்பு.  

யூஜெனோல் என்ற பொருள் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இது, கிராம்பில் போதுமான அளவு உள்ளதால், கிராம்பின் பயன்பாடு மன அமைதியை ஏற்படுத்துகிறது. 

வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பை எப்படி பயன்படுத்தினால் நல்லது?

மேலும் படிக்க | முகப்பரு, வடுக்கள் நீங்கி முகப்பொலிவு பெற கிராம்பு எண்ணெய்
 
படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்குவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்தும் கிராம்பை இரவில் சாப்பிடுவது நல்லது. 

தினமும் கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவுகிறது.  

உணவே மருந்தாகலாம் ஆனால் மசாலா மருந்தாகுமா? ஆகும் என்பதற்கு அட்டகாசமான உதாரணம் கிராம்பு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News