இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் யோக ஆசனம் செய்து போன்று சித்தரிக்கப்பட்டுள்ள 3D அனிமேஷன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் உறையாற்றி வருகிறார்.
இதை தொடர்ந்து அவர் 3D அனிமேஷன் வீடியோவை இவ்வொரு வாரமும் வெளியிடுகிறார். இந்த வீடியோவில் பிரதமர் மோடி யோகா கற்றுக்கொடுக்கும் வகையிலும், தானும் யோகா ஆசனத்தினை செய்வது போலவும சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைக்கு விருக்ஷஸனா (Vrikshasana) என பெயரும் வைத்துள்ளார். ஒவ்வொரு வாரமும் புது புது யோகாவை கற்றுக்கொடுகிறார் மோடி. இதை தொடர்ந்து நான்காவது வாரமான இன்று தனது நான்காவது யோகா பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வாரம் யோகா பயிற்சியானது செரிமாணம் மற்றும் முதுகு வலியை போக்கக்கூடிய ஆசனமாக அமைந்துள்ளது.
இதோ அந்த வீடியோ காட்சி.....!
Begin your week by practising Vrikshasana. Apart from other benefits, this Asana improves concentration and reduces back pain. #4thYogaDay #FitIndia pic.twitter.com/AAkveX7dJ6
— Narendra Modi (@narendramodi) April 2, 2018