கர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்!

பெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒரு வருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!

Last Updated : Nov 9, 2018, 07:10 PM IST
கர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்! title=

பெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒரு வருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!

பிரிட்டிஷ் கொளம்பியா பல்கலை கழகம் மற்றும் ஹாட்வர்ட் பல்கலைகழகம் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில், பெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒருவருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என தெரிவித்துள்ளது. சுமார் 150000 குழந்தைகளின் பிறப்புக்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஆரோக்கியமான குழந்தைகளை பெற தாய்மார்கள் குறைந்தது ஒரு வருடத்தில் இருந்து 18 மாதங்கள் வரையில் இடைவெளி விடுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்த ஆய்வின் தலைமை மருத்துவர் Dr. வெட்னி நார்மன் தெரிவிக்கையில்... இந்த ஆய்வானது மூத்த பெண்மணிகளுக்கானது. மூத்த பெண்மனிகள் நெடுநாள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகையில், அடுத்தடுத்து மகப்பேறு அடைகின்றனர். இவ்வாறான செயல்பாடானது குழந்தையின் வளர்ச்சியினை பெருமளவில் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

அதே வேலையில் இந்த இடைவெளியானது சிறிய வயது தாய்மார்களுக்கு பொருந்தும். தங்களுடைய ஆய்வில் பெரும்பாண்மை தகவல்கள் நடுத்தர வயது தாயினரிடம் இருந்த பெரப்பட்டது. இந்த தகவல்களின் படி குறைந்தது ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை தாய்மார்கள்கள் இடைவெளி பெருதல் வேண்டும். குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த இடைவெளியினை நிச்சையம் கடைபிடித்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த ஆய்வானது கனடாவில் உள்ள தாய்மார்களை மட்டும் கொண்டு நடத்தப்பட்டுள்ளதால், உலக ஆளவில் உள்ள தாய்மார்களுக்கு இந்த ஆய்வின் முடிவு பொருந்துமா என்பது கேள்விகுறி தான்...

Trending News