மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்யலாமா? மருத்துவர்கள் கூறுவது இதுதான்!

Advantages And Disadvantages Of Walking : பலருக்கு மாதவிடாய் சமயங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லதா இல்லையா என்று தெரியாது. இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 5, 2024, 06:16 PM IST
  • மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்யலாமா?
  • மருத்துவர்கள் கூறுவது என்ன?
  • இதனால் என்ன பயன்கள் உள்ளன?
மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்யலாமா? மருத்துவர்கள் கூறுவது இதுதான்! title=

Advantages And Disadvantages Of Walking In Tamil : ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வகை படுத்தப்பட்டிருக்கும். ஒரு சில மகளிருக்கு மாதவிடாய் சமயங்களில் வலியை தாங்கி கொள்ளும் சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வலியினால் எதுவுமே செய்ய இயலாது. வழக்கமாக, ஃபிட்டான வாழ்க்கைய கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தினமும் நடைப்பயிற்சி சென்று பழகிய பெண்களும் மாதவிடாய் சமயங்களில் நடைப்பயற்சி செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும்.

மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி..

மாதவிடாய் காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, மனநிலையை மேம்படுத்துவது, ரத்த போக்குக்கு உதவுவது, மன அழுத்ததை குறைப்பது, மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை பயப்பது போன்ற நன்மைகளை அளிக்கும். ஆனாலும், உங்கள் உடல் குறித்து உங்களுக்குதான் தெரியும் என்பதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மகப்பேறு மருத்துவர்கள், மாதவிடாய் காலங்களில் சில வர்க் அவுட்களையும் செய்யலாம் என்று கூறுகின்றனர். 

மாதவிடாய் சமயத்தில் வாக்கிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? 

சீரான ரத்த ஓட்டம்:

நடைபயிற்சி, இடுப்பு பகுதி உட்பட ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டத்தால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வயிறு வீக்கம் உள்பட பல்வேறு உடல் நலக்கோளாறுகளையும் இது நிவர்த்தி செய்ய நடைப்பயிற்சி உதவுகிறது. 

மனநிலையை மேம்படுத்தும்:

நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சி செயல்பாடுகள், இயற்கையாகவே  மனநிலையை உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாற்றங்களுக்கும் எரிச்சல் மன நிலைக்கும் வழிவகுக்கும். இதை, நடைப்பயிற்சி மேற்கொள்வதால் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | சிறுநீரக கற்கள்... ஆரம்பகால அறிகுறிகள்... தவிர்க்க செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தை குறைக்கும்:

இயற்கையுடன் இணைந்து வெளியிடத்தில் நடப்பதோ அல்லது டிரெட்மில்லில் வீட்டிற்குள் நடப்பது, மன அழுத்ததை குறைக்க உதவலாம். மாதவிடாய் காலத்தில் மன நலனை பார்த்துக்கொள்வது முக்கியம், ஏனெனில் மன அழுத்தமும் மாதவிடாயை அதிகரிக்கலாம்.

என்னென்ன தீமைகள் ஏற்படும்?

அதிகரிக்கும் இரத்தப்போக்கு:

சில மகளிருக்கு தீவிர உடல் உழைப்பால் மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகரிக்கலாம். நடைப்பயிற்சி உள்பட சில உடல் ரீதியான செயல்பாடுகள் ரத்தப்போக்கை அதிகரிக்கலாம். 

தசை சோர்வடையும்:

தீவிரமான அல்லது நீண்ட நேர நடைப்பயிற்சி தசை சோர்வுக்கு வழிவகுக்கலாம். லேசான கால்வலி இருக்கலாம், ஆனால் மாதவிடாய் சமயங்களில் அதிகமான கால்வலி வரும் போது அதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க வேண்டாம். 

சுகாதாரம்:

பெண்கள் உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடும்போது அவர்களின் உடல் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
மாதவிடாயின் போது, சானிட்டரி பொருட்களை தவறாமல் மாற்றுவது கட்டாயமாகும். ஈரப்பதத்தை குறைக்கும் ஆடைகளை அணிவது அசௌகரியத்தையும் எரிச்சலையும் தடுக்க உதவும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தைராய்டு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் கருஞ்சீரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News