Corona Pneumonia: கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனாவின் அடுத்த அட்ராசிடி

COVID-19 Pneumonia: கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் கடுமையான பாதிப்பு, நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2023, 01:22 PM IST
  • கொரோனாவால் மற்றுமொரு விபரீத பாதிபு
  • நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படும் கோவிட் பாதிப்பு
  • கொரோனாவின் அடுத்த பயங்கரமான எதிரொலி விரைவில்
Corona Pneumonia: கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனாவின் அடுத்த அட்ராசிடி title=

கோவிட் நிமோனியா: சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் கோவிட் வழக்குகள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, நிமோனியா பாதிப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனருக்கு, நாள்பட்ட இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதில், கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் கடுமையான பாதிப்பு, நிமோனியாவை ஏற்படுத்துகிறது. 

சாதாரண நிமோனியாவிற்கும், கோவிட் நோயால் உருவாகும் நிமோனியாவுக்கும் என்ன வித்தியாசம்?

நிமோனியா 
நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும், இது நுரையீரலின் காற்றுப் பைகள் வீங்குவதால் ஏற்படுகிறது. நுரையீரலில், திரவம் மற்றும் சீழ் ஆகியவை நிரம்பும்போது, நுரையீரலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. மூச்சுத் திணறல், இருமல், காய்ச்சல், நெஞ்சு வலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இந்த நிலையின் சில அறிகுறிகளாகும். 

மேலும் படிக்க | கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை

கோவிட் நிமோனியா 

 

கோவிட் நோய் பாதிப்பு, நுரையீரலைத் தாக்குகிறது, வைரஸ் தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பலவீனமடைகிறது, மேலும் இந்த நேரத்தில் நுரையீரலின் காற்றுப் பைகளில் சீழ் அல்லது திரவம் நிரம்பினால், அது கோவிட்-19 நிமோனியா எனப்படும். 

 

கோவிட் நிமோனியா ஏற்பட்டால் என்ன பிரச்சனை ஏற்படும்?
ஒருவருக்கு கோவிட் நிமோனியாவால் பாதிக்கப்படும்போது, நுரையீரல் முதலில் COVID வைரஸால் பாதிக்கப்படும். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், நுரையீரலில் சீழ் மற்றும் திரவம் நிரம்பி, சரியாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது அடிக்கடி இருமல், காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு வழிவகுக்கிறது.

கோவிட் நிமோனியாவின் அறிகுறிகள்
காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கோவிட்-19 இன் பொதுவான ஆரம்ப அறிகுறிகளாகும். கோவிடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த அறிகுறிகளுடன், சோர்வு, குளிர், குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைவலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, தொண்டை புண், தசை வலி அல்லது உடல் வலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து போவது தோல் வறட்சி ஏற்பட்டால், அது கோவிட் நிமோனியாவுக்கான அறிகுறிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோவிட் நிமோனியாவின் கடுமையான அறிகுறிகள்
கோவிட் நிமோனியா ஏற்பட்டவர்களுக்கு, அது தீவிரமாகும்போது, இதயத் துடிப்பு அதிகரிப்பது, மூச்சுத் திணறல் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சடைப்பு, தலைச்சுற்றல், அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தோன்றும்.  

கோவிட் நிமோனியாவால் யாருக்கு பாதிப்பு அதிகம்?
ஆஸ்துமா நோயாளிகள், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், சிறுநீரக செயலிழப்பு, உடல் பருமன் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு கோவிட் நிமோனியா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியாவுக்கு தோள் கொடுப்போம்! உஸ்பெகிஸ்தான் குடியரசுத்தலைவர் உறுதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News